News May 1, 2024

பள்ளி மாணவர்களுக்கு பயிற்சி முகாம்

image

வேலூர் மாவட்ட அறிவியல் மையத்தில் ‘எந்திரனியல் பயிற்சி பட்டறை’ 6ஆம் வகுப்பு முதல் பிளஸ்-1 மாணவர்களுக்கு மே 14, 15 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற உள்ளது. இந்த பயிற்சி பட்டறையில் இவி-3 ரோபாட்டின் பாகங்களை தொகுத்து வடிவமைத்து செயல் முறைபடுத்த பயிற்சி அளிக்கப்படும். பங்குபெற விரும்பும் பள்ளி மாணவர்கள் நேரில் முன்பதிவு செய்யவேண்டும். என மாவட்ட அறிவியல் அலுவலர் ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.

Similar News

News August 22, 2025

கீழ்கவரப்பட்டில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ முகாம்

image

வேலூர்: கணியம்பாடி ஒன்றியம், கீழ்கவரப்பட்டு அரசு மகளிர் உயர்நிலைப் பள்ளியில் நாளை (ஆக.23) ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ உயர் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற உள்ளது. இதற்கான முன்னேற்பாடுகளை மாவட்ட ஆட்சியர் வி.ஆர்.சுப்புலட்சுமி ஆய்வு செய்தார். இந்த முகாமில் பொதுமக்களுக்கு 17 சிறப்பு மருத்துவர்கள் மூலம் பரிசோதனையும் சிகிச்சையும் அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

News August 22, 2025

வேலூர்: 10th பாஸ் போதும்; போலீஸ் வேலை!

image

வேலூர் இளைஞர்களே POLICE ஆக வேண்டுமா? தமிழ்நாடு சீருடைப் பணியாளர்கள் தேர்வாணையம் (TNUSRB) சார்பில் 3,644 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.18,200 முதல் ரூ.67,100 வரை வழங்கப்படும். விருப்பம் உள்ளவர்கள் <>இங்கே<<>> க்ளிக் செய்து இன்று முதல் செப்.21 வரை விண்ணப்பிக்கலாம். SHARE பண்ணுங்க!

News August 22, 2025

வேலூரில் பொது இடத்தில் மது அருந்திய 7 பேர் கைது.

image

வேலூர், காகிதப்பட்டறை பகுதியில் நேற்று (ஆக.21) ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த வேலூர் வடக்கு காவல் நிலைய காவல்துறையினர், பொது இடத்தில் மது அருந்திக் கொண்டிருந்த கார்த்திக் (32), ஹரிஸ்குமார் (28), ரஞ்சித்குமார் (37), சவுந்தர் (32), சசிக்குமார் (55), விக்னேஷ் (35), மற்றும் ரவி (53) ஆகிய ஏழு பேரைக் கைது செய்தனர்.

error: Content is protected !!