News May 23, 2024
பள்ளி மாணவர்களுக்கு சீருடை தைக்கும் பணிகள் தீவிரம்
கோடை விடுமுறை முடிந்து ஜீன் 3ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு சீருடை வழங்குவதற்காக தஞ்சை நாஞ்சிக்கோட்டை அருகே அண்ணாநகர் பகுதியில் உள்ள மாவட்ட துணி வெட்டும் மையத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கான சீருடை தயார் செய்யும் பணியில் ஊழியர்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
Similar News
News November 20, 2024
ஆசிரியை குத்திக்கொலை: அமைச்சர் கண்டனம்
தஞ்சையில் ஆசிரியை ரமணியை குத்தி கொன்றவர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். ‘ஆசிரியர்கள் மீதான வன்முறையை துளியும் சகித்துக் கொள்ள முடியாது, மல்லிப்பட்டினம் அரசுப் பள்ளி ஆசிரியை மீதான தாக்குதலை கண்டிக்கிறோம். ஆசிரியை ரமணியை இழந்து வாடும் குடும்பத்தினர் உள்ளிட்டோருக்கு இரங்கல்’ என அவர் தெரிவித்தார்.
News November 20, 2024
தஞ்சை அருகே ஆசிரியை குத்திக்கொலை
தஞ்சை மல்லிப்பட்டினம் அரசு உயர்நிலைப்பள்ளியில் ஆசிரியை ரமணி என்பவரை இன்று வகுப்பறையில் பாடம் நடத்தி கொண்டிருந்த போது, சின்னமனை கிராமத்தைச் சேர்ந்த மதன்குமார் என்பவர் கத்தியால் குத்தியுள்ளார். இதில் படுகாயமடைந்த ஆசிரியர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
News November 20, 2024
கும்பகோணம்: துணை போலீஸ் சூப்பிரண்டுக்கு பிடிவாரண்ட்
சோழபுரம் பகுதியை சேர்ந்த சுந்தரம் கடந்து 2016 ஆம் ஆண்டும் அவரது மகன் சுகுமார் கடந்த 2018 ஆம் ஆண்டும் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கு விசாரணை கும்பகோணம் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. அப்போது காவல் ஆய்வாளராக இருந்த சரவணன் நீதிமன்றத்தில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவிட்டது. அவர் ஆஜர் ஆகாததால் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆய்வாளர் சரவணன் தற்போது நீலகிரியில் துணை போலீஸ் சூப்பிரண்டாக உள்ளார்.