News December 3, 2024

பள்ளி மாணவர்களின் கோரிக்கையை நிறைவேற்றிய கலெக்டர்

image

அணைக்கட்டு தாலுகா,அப்புகல் ஊராட்சியை சேர்ந்த ஏரி கொல்லை பள்ளி மாணவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர் கூட்டத்தில் எங்கள் ஊரில் இருந்து அணைக்கட்டு வரை அரசு பஸ் இயக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து கலெக்டர் சுப்புலட்சுமி அரசு போக்குவரத்துக்கழகம் மூலம் தினமும் காலை 8.15 மணிக்கு வேலூரில் இருந்து அணைக்கட்டு செல்லும் தடம் டி8ஏ பேருந்தை ஏரி கொல்லை வரை நீட்டிப்பு செய்து உத்தரவிட்டார்.

Similar News

News August 13, 2025

APPLY NOW: வேலூர் கூட்டுறவு துறையில் வேலை

image

தமிழ்நாடு முழுவதும் கூட்டுறவு துறையில் இயங்கும் சங்கங்கள் மற்றும் வங்கிகளில் உள்ள உதவியாளர் மற்றும் இளநிலை உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 2,500 காலி பணியிடங்கள் உள்ளன. அதில் வேலூரில் மட்டும் 79 பணியிடங்கள் உள்ளன. டிகிரி முடித்தவர்கள் இந்த <>இணையதளத்தில் <<>>வரும் 29ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு 04162253009 என்ற எண்ணை தொடர்பு கொள்ளுங்கள். ஷேர் செய்யுங்கள்

News August 13, 2025

வேலூரில் 4,725 பேருக்கு பாதிப்பு… எச்சரிக்கை

image

சென்னையில், 1.80 லட்சம் தெரு நாய்கள் உள்ளன. சென்னை போன்ற குறிப்பிட்ட மாநகராட்சிகளை தவிர, மற்ற நகர்ப்புற மற்றும் ஊரக பகுதிகளில் தெரு நாய்கள் கணக்கெடுப்பு மற்றும் கட்டுப்படுத்துதல் தொடர்பாக எந்த நடவடிக்கையும் இல்லை. கடந்த ஜனவரி மாதம் முதல் ஜூன் வரை வேலூரில் 4,725 பேர் நாய்கடியால் பாதிக்கப்பட்டுள்ளனர். நல்வாய்ப்பாக ரேபிஸ் தொற்றால் உயிரிழப்பு ஏற்படவில்லை. எனவே பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருங்கள்.

News August 13, 2025

மகளிர் உரிமைத்தொகைக்கு விண்ணப்பிக்க இங்கு போங்க

image

வேலூரில் இன்று (ஆகஸ்ட் 13) வேலூர், ஒடுக்கத்தூர், குடியாத்தம், பேரணாம்பட்டு ஆகிய பகுதியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் நடைபெற உள்ளது. முகாம் நடைபெறும் இடங்களின் முழுமையான விபரங்களை இந்த <>லிங்கை <<>>கிளிக் செய்து தெரிந்து கொள்ளலாம். இந்த முகாமில் மகளிர் உரிமைத்தொகை, ஓய்வூதியம் போன்ற அரசு சேவைகளில் குறை இருந்தால் மனுவாக அளித்து உடனடியாக பயன்பெறலாம். அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!