News April 4, 2024
பள்ளி பேருந்தில் பாலியல் தொல்லை: வழிகாட்டு நெறிமுறை
தனியார் பள்ளி பேருந்தில் மாணவர்களுக்கு ஏற்படும் பாலியல் தொல்லையை தடுக்க வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக்கல்வித் துறை வெளியிட்டுள்ளது. அதில், பள்ளியில் ‘மாணவர் மனசு’ பெட்டி வைக்கப்பட்டு அதில் பெறப்படும் குறைகளை 24 மணி நேரத்தில் தீர்க்க வேண்டும். ஓட்டுநருக்கு சட்டம் குறித்து பயிற்சி வழங்க வேண்டும். ஓட்டுநர், உதவியாளர்கள் குறித்த விவரங்களை EMIS Portalஇல் பதிவேற்ற வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
Similar News
News November 19, 2024
நாகையில் தனியார் வேலைவாய்ப்பு முகாம்; ஆட்சியர் தகவல்
நாகை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் 22.11.2024 காலை 10 மணிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெறவுள்ளது. தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் 5ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை ஐடிஐ, பட்டப்படிப்பு, முதுநிலை பட்டப்படிப்பு முடித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் முகாமில் கலந்துக்கொள்ளலாம் என்று ஆட்சியர் ஆகாஷ் தகவல் தெரிவித்துள்ளார்.
News November 19, 2024
நாகை மாவட்ட மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை
வங்கக்கடலில் நிலவி வரும் மோசமான வானிலை மற்றும் புதிதாக உருவாக உள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக, நாகை மாவட்ட மீனவர்கள் மறு அறிவிப்பு வரும் வரை மீன்பிடிக்க கடலுக்கு செல்ல தடை விதிக்கப்படுவதாக மீன்வளத்துறை அறிவித்துள்ளது. மேலும் கடலுக்குள் சென்ற மீனவர்கள் வரும் நவ.23-ஆம் தேதிக்குள் (சனிக்கிழமை) கரை திரும்ப வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
News November 19, 2024
மாணவர்கள் கல்வி உதவிக்கு விண்ணப்பிக்கலாம்
மத்திய அரசின் கல்வி நிறுவனங்களான ஐஐடி, ஐஐஎம் என்ஐடி மற்றும் மத்திய பல்கலைக்கழகங்களில் பயிலும் தமிழகத்தை சேர்ந்த பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபின இன மாணவர்கள் 2024-25ம் கல்வி ஆண்டிற்கான கல்வி உதவித் தொகை பெற மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலரை அணுகி பயன்பெறலாம் என ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.