News March 28, 2025
பள்ளி படிப்பும், கணினி திறனும் இருந்தால் வேலை

மத்திய சாலை ஆய்வு நிறுவனத்தில் ஜூனியர் அசிஸ்டன்ட், ஜூனியர் ஸ்டெனோகிராபர் ஆகிய 209 பணியிடங்கள் நிரப்படவுள்ளன. ஜூனியர் அசிஸ்டன்ட் பணிக்கு ரூ.19,900 – 63,200, ஜூனியர் ஸ்டெனோகிராபர் பணிக்கு ரூ.25,500 – 81,100 வரை சம்பளம் வாங்கப்பட உள்ளன. பள்ளிப்படிப்பு முடித்திருக்க வேண்டும். கணினி திறன் இருக்க வேண்டும். விருப்பம் உள்ளவர்கள் வரும் ஏப்ரல் 21ஆம் தேதிக்குள் <
Similar News
News March 31, 2025
ரேஷன் கார்டில் கைரேகை வைக்கலயா?

AAY மற்றும் PHH குடும்ப அட்டைதாரர்கள் தங்கள் கைரேகையை பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்யாதவர்கள் இன்றைக்குள் (மார்.31) பதிவு செய்ய வேண்டும் என்றும், தவறும் பட்சத்தில் அட்டையை இழக்க நேரிடும் என்றும் அண்மையில் எச்சரிக்கை வெளியிடப்பட்டுள்ளது. ஒருவேளை நீங்கள் வெளி மாவட்டத்திலோ, வெளி மாநிலத்திலோ இருந்தால் அருகில் உள்ள ரேஷன் கடைகளுக்கு சென்று அங்கு ரேகையை பதிவு செய்து கொள்ளலாம். ஷேர் செய்யுங்கள்.
News March 31, 2025
பைக் மீது பேருந்து மோதி விபத்து: இளைஞர் உயிரிழப்பு

திருநள்ளாறு பகுதியைச் சேர்ந்தவர்கள் தினேஷ், ராகவன். நண்பர்களான இருவரும், நேற்று (மார்.30) காலை பைக்கில் புதுச்சேரியிலிருந்து சென்னை நோக்கிச் சென்றனர். பைக்கை ராகவன் ஓட்டினார். அப்போது எதிரில் வந்த அரசு விரைவு பேருந்து பைக் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் தினேஷ் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். ராகவன் புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
News March 30, 2025
விழுப்புரம் விவசாயிகள் கவனத்திற்கு

விழுப்புரம் மாவட்டத்தில் பி.எம் கிசான் ஊக்கத்தொகை பெறும் 89,958 விவசாயிகளில் தற்போது வரை 50,404 பேர் மட்டுமே தற்போது வரை அடையாள எண் பெறுவதற்காக பதிவு செய்துள்ளனர். மீதமுள்ள 39,554 விவசாயிகள் ஏப்ரல் -8 ஆம் தேதிக்குள் தனி அடையாள எண் பெற வேண்டும், அப்போதுதான் பி.எம் கிசான் ஊக்கத்தொகை தொடர்ந்து பெற முடியும் என்று வேளாண் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.