News March 29, 2025

பள்ளி படிப்பும், கணினி திறனும் இருந்தால் வேலை

image

மத்திய சாலை ஆய்வு நிறுவனத்தில் ஜூனியர் அசிஸ்டன்ட், ஜூனியர் ஸ்டெனோகிராபர் ஆகிய 209 பணியிடங்கள் நிரப்படவுள்ளன. ஜூனியர் அசிஸ்டன்ட் பணிக்கு ரூ.19,900 – 63,200, ஜூனியர் ஸ்டெனோகிராபர் பணிக்கு ரூ.25,500 – 81,100 வரை சம்பளம் வாங்கப்பட உள்ளன. பள்ளிப்படிப்பு முடித்திருக்க வேண்டும். கணினி திறன் இருக்க வேண்டும். விருப்பம் உள்ளவர்கள் வரும் ஏப்ரல் 21ஆம் தேதிக்குள் இந்த லிங்கை <>க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம்.

Similar News

News April 2, 2025

ஜவுளி பூங்கா அமைக்க ரூ. 2.50 கோடி நிதியுதவி: கலெக்டர் தகவல்

image

சிறிய அளவிலான ஜவுளிப் பூங்கா அமைக்க முன் வரும் தொழில் முனைவோர்களுக்கு ரூ.2 கோடியே 50 லட்சம் வரை நிதியுதவி தமிழக அரசால் வழங்கப்படும். இது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் தி.மலை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் 09.04.2025 அன்று 04.00 மணிக்கு நடைபெறுவதால் தொழில் முனைவோர்கள், முதலீட்டாளர்கள் மற்றும் தொழில் கூட்டமைப்புகள் இக்கூட்டத்தில் கலந்துகொள்ள மாவட்ட ஆட்சியர் க. தர்ப்பகராஜ் தெரிவித்துள்ளார்.

News April 2, 2025

குழந்தையாக பிறகும் பாலசுப்பிரமணியர்

image

திருவண்ணாமலை மாவட்டம், மண்மலை என்னும் ஊரில் பிரசித்திபெற்ற பாலசுப்பிரமணியர் கோயில் உள்ளது. இக்கோயில் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது. இத்தலத்திற்கு வந்து வழிபட்டால் குழந்தை இல்லாத தம்பதிக்கு முருகனே குழந்தையாக பிறப்பார் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது. மேலும், நோய் நொடி நீங்கி வளமான வாழ்வு பெற பக்தர்கள் இங்கு வந்து வழிபடுகின்றனர். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.

News April 2, 2025

தமிழில் பெயர் பலகை கட்டாயம்: மாவட்ட ஆட்சியர் அதிரடி 

image

தி.மலை மாவட்டத்தில் உள்ள அனைத்து கடைகள், வணிக நிறுவனங்கள், உணவு நிறுவனங்களில் உள்ள பெயர் பலகை கட்டாயம் தமிழில் இருக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் க. தர்ப்பகராஜ் உத்தரவிட்டுள்ளார். வரும் மே.15க்குள் இதனை செய்ய வேண்டும் என்று கூறியுள்ள அவர் அபராதத்தை தவிர்க்கவும் அறிவுறுத்தியுள்ளார். இதை பற்றி உங்கள் கருத்து என்ன என்பதை கமென்டல சொல்லுங்க. மற்றவர்களுக்கும் ஷேர் செய்து இதனை தெரியப்படுத்துங்கள். 

error: Content is protected !!