News December 26, 2025
பள்ளி திறக்கப்படும் முதல்நாளே புத்தகங்கள் வழங்கப்படும்

தமிழக அரசு புதிய உத்தரவு பள்ளிகள் திறப்பையொட்டி அரையாண்டு தேர்வு விடுமுறை முடிந்து பள்ளி திறக்கப்படும் முதல்நாளே, மாணவர்களுக்கு மூன்றாம் பருவ புத்தகங்கள் வழங்கப்பட வேண்டும் எனத் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. அனைத்து மாவட்டங்களுக்கும் புத்தகங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், தாமதமின்றி புத்தகங்கள் கிடைப்பதை பள்ளி தலைமை ஆசிரியருக்கு உறுதி செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Similar News
News January 1, 2026
கிருஷ்ணகிரி: இரவு ரோந்து பணி காவலர் விவரம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், இரவு 10 மணி முதல் நாளை (ஜன -01) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News January 1, 2026
கிருஷ்ணகிரி மக்களே வீட்டில் வோல்டேஜ் பிரச்சனையா?

கிருஷ்ணகிரி மக்களே, வோல்டேஜ் பிரச்சனையா? EB ஆபிஸ் எங்கு இருக்கிறது என்று தேடி அலைய வேண்டாம். வீட்டில் இருந்தே WHATSAPP மூலம் 94458 50811, 9443111912 இந்த நம்பரில் புகைப்படத்துடன் உங்கள் புகாரை பதிவு செய்யலாம். மேலும், கால் செய்து புகார் அளிக்க, 94987 94987 இந்த நம்பரை தொடர்பு கொள்ளலாம். *அதிக பயனுள்ள இந்த தகவலை தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க*
News January 1, 2026
பரிதா நவாப்புக்கு அதிமுக-வில் புதிய பொறுப்பு

கிருஷ்ணகிரி மாவட்டம், கிருஷ்ணகிரி முன்னாள் நகர்மன்ற தலைவர் பரிதா நவாப்புக்கு அதிமுகவில் புதிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. அதிமுகவில் கழக மகளிர் அணி துணை செயலாளராக அவரை எடப்பாடி பழனிசாமி நியமித்து அறிவித்துள்ளார். சமிபகாலத்திற்கு முன்பு திமுகவில் இருந்து விலகி அதிமுக சென்ற பரிதா நவாப்புக்கு அதிமுக தலைமைக் கழகம் பொறுப்பு வழங்கியுள்ளது.


