News March 12, 2025
பள்ளி சிறுமியிடம் தவறாக நடந்த எலக்ட்ரீசியன் கைது

கூடுவாஞ்சேரி பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுமி வீட்டில் விளையாடிக் கொண்டு இருந்துள்ளார். அப்போது நந்திவரம் கூடுவாஞ்சேரி மகேஸ்வரி நகரைச் சார்ந்த எலெக்ட்ரிசியன் ரவி (42) அந்தச் சிறுமியிடம் தவறாக நடக்க முயன்றுள்ளார். இதனை அங்கிருந்தவர்கள் பார்த்து ரவியைப் பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வண்டலூர் அனைத்து மகளிர் போலீசார் விசாரிக்கின்றனர்.
Similar News
News September 29, 2025
செங்கல்பட்டு: கண் நோயை குணமாகும் சீனிவாச பெருமாள்

செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள செம்மஞ்சேரி கிராமத்தில் அமைந்துள்ளது 1500 ஆண்டுகள் பழமையான செம்மஞ்சேரி சீனிவாச பெருமாள் கோயில். இங்குள்ள சீனிவாச பெருமாளை வணங்குவதன் மூலம் கண் தொடர்பான பிரச்சினைகள் குணமடைவதாக நம்பப்படுகிறது. ஒரு பல்லவ மன்னன் தனது இழந்த பார்வையை இங்கு வழிபட்டு மீண்டும் பெற்றதாகத் தல புராணம் கூறுகிறது. இன்றும் பலர் கண் சம்பந்தமான கோளாறுகளுக்கு இங்கு வந்து வழிபடுகிறார்கள். ஷேர் பண்ணுங்க
News September 29, 2025
ALERT: செங்கல்பட்டில் இன்று கனமழை வெளுக்கும்

செங்கல்பட்டு மற்றும் விழுப்புரம் ஆகிய 2 மாவட்டங்களில் இன்று (செப்.29) கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், தமிழ்நாடு முழுவதும் பரவலாக மழை பெய்யும் எனவும் வானிலை மையம் எச்சரித்துள்ளது. எனவே வெளியே செல்லும் மக்கள் ரெயின் கோர்ட், குடையுடன் முன்னெச்சரிக்கையா இருங்க. தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.
News September 29, 2025
செங்கல்பட்டு: கரண்ட் பில் அதிகமா வருதா?

செங்கல்பட்டு மக்களே கரண்ட் பில் அதிகமா வருதா? கவலையை விடுங்க இதுபோன்ற பிரச்னைகளுக்கு நீங்கள் EB அலுவலகத்துக்கு செல்ல வேண்டும் என்று அவசியல் இல்லை. உரிய ஆவணங்களுடன் தமிழ்நாடு அரசின் TANGEDCO என்ற செயலியில் புகார் அளிக்கலாம்.அல்லது 94987 94987 என்ற கட்டணமில்லா புகார் எண்ணை தொடர்பு கொண்டும் புகார் தெரிவிக்கலாம். இதில் மின் கட்டணத்தையும் செலுத்தலாம். இந்தத் தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.