News July 11, 2024
பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பேச்சு போட்டி

அம்பேத்கர், கருணாநிதி பிறந்த நாளையொட்டி பள்ளி, கல்லூரி மாணாக்கருக்கு ஜூலை 18, 19 இல் பேச்சுப் போட்டி முஹமது சதக் தஸ்தகீர் பி.எட்., கல்லூரியில் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் நடைபெற உள்ளது.
இதில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு 3 பரிசுகள் வழங்கப்படஉள்ளது. இதில் பங்கேற்கும் அரசுப் பள்ளி மாணவர் இருவருக்கு சிறப்பு பரிசு வழங்கப்படும் என கலெக்டர் விஷ்ணு சந்திரன் தெரிவித்துள்ளார்.
Similar News
News September 11, 2025
பரமக்குடி அருகே அரசு பஸ் மோதி விபத்து

பரமக்குடி அருகே கமுதக்குடி என்ற இடத்தில் மதுரை 4 வழிச்சாலையில் கருவேல மரங்களை அரைக்கும் இயந்திரத்தை வெங்காளூரை சேர்ந்த ஓட்டுநர் விஜயகுமார் ஊரக்குடிக்கு ஓட்டி சென்றுள்ளார். அப்போது ராமேஸ்வரத்தில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு அதிவேகத்தில் சென்ற அரசு பேருந்து அந்த வண்டியின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் கருவேலம் மரங்களை அரைக்கும் இயந்திரம் முற்றிலும் சேதமானது.
News September 11, 2025
ராமநாதபுரம்: இன்று பஸ் போக்குவரத்து நிறுத்தம்

பரமக்குடியில் இமானுவேல் சேகரன் நினைவு நாள் இன்று அனுசரிக்கப்பட உள்ளது. இதையடுத்து பரமக்குடி பகுதியில் பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.இதன்படி ராமநாதபுரத்தில் இருந்து மதுரை செல்லும் பஸ்கள் திருவாடானை, காளையார்கோவில், சிவகங்கை வழியாக மதுரை செல்லும். ராமநாதபுரம், கீழக்கரை, ஏர்வாடி பகுதிகளில் மட்டும் பஸ் போக்குவரத்து இருக்கும் என போக்குவரத்து கழகத்தினர் தெரிவித்தனர்.SHARE பண்ணுங்க.
News September 11, 2025
தவில் நாதஸ்வரம் பயிற்சிப்பள்ளி சேர்க்கை

ராமேஸ்வரத்தில் உள்ள ராமநாதசுவாமி கோயிலில் தொடங்கி நடத்தப்பட உள்ள தவில் நாதஸ்வரம் பயிற்சி பள்ளியில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. 3 ஆண்டுகள் பயிற்சி வழங்கப்படும். இதில் 13 வயது முதல் 20 வயது வரை இப்பயிற்சி பள்ளியில் சேர்த்துக்கொள்ள அனுமதிக்கப்படுவர். ஆண், பெண் என ஆகிய இருபாலரும் இப்பயிற்சியில் சேர விண்ணப்பிக்கலாம். இதில் பயிற்சி பெறும் மாணவர்களுக்கு மாதம் 10 ஆயிரம் ஊக்கதொகையாக வழங்கப்படும்.