News December 13, 2024
பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

கனமழை எச்சரிக்கை காரணமாக நெல்லை மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (டிச.13) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, நெல்லை மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதையடுத்து, மாணவர்களின் பாதுகாப்பு நலன் கருதி, பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளித்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். ஷேர் பண்ணுங்க
Similar News
News November 18, 2025
நெல்லை மாநகராட்சி அதிரடி – ரூ.2 ஆயிரம் அபராதம்!

திருநெல்வேலி மாநகர பகுதிகளில் பொதுமக்களுக்கு இடையூறாக சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளின் உரிமையாளர்களுக்கு ரூ.2000 அபராதம் விதிக்க மாநகராட்சி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. மாநகர நல அலுவலர், சுகாதாரத்துறை அதிகாரிகள் மாநகரம் முழுவதும் ஆய்வு செய்து மாடுகளை பிடித்து அபராதம் விதிக்க திட்டமிட்டுள்ளனர்.

நெல்லை: மண் அள்ளியதால் தகராறு; 6 பேருக்கு வெட்டு

விக்கிரமசிங்கபுரம் அருகே செட்டிமேடு பகுதியை சேர்ந்த மாரிமுத்து என்பவன் வீட்டின் அருகில் பஞ்சாயத்து நிர்வாகம் சார்பில் ரோடு போடுவதற்காக மண் கொட்டி வைக்கப்பட்டுள்ளது. இந்த மண்ணை பக்கத்து வீட்டில் வசிக்கும் செல்வின் அள்ளிச்சென்றார். இதனை மாரிமுத்துவின் மாமியார் ஆவுளம்மாள் கண்டித்தார். இதனால் நேற்று ஏற்பட்ட தகராறில் செல்வின் மண்வெட்டியால் 6 பேரை வெட்டினார். விகேபுரம் போலீசார் விசாரணை.