News April 1, 2025
பள்ளி கட்டிடத்தை திறந்து வைத்த போக்குவரத்து துறை அமைச்சர்

குன்னம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வேப்பூர் ஒன்றியம் வெண்மணி சிதம்பரம் மானிய நடுநிலைப் பள்ளியில் பள்ளி நிர்வாகம் மற்றும் ஊர் பொதுமக்களின் பங்களிப்புடன் ரூ.75 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய பள்ளி கட்டிடத்தை போக்குவரத்து துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். உடன் எம்.எல்.ஏ மற்றும் கழக நிர்வாகிகள் இருந்தனர்.
Similar News
News September 21, 2025
பெரம்பலூர்: 12th போதும் அரசு வேலை!

தமிழகத்தில் செயல்பட்டு வரும் இந்திய பொதுத்துறை நிறுவனமான நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் (NLC) சுகாதார ஆய்வாளர் காலிப்பணியிடங்க்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்காக மாத சம்பளமாக ரூ.38,000 வரை வழங்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் <
News September 21, 2025
பெரம்பலூரில் நாம்தமிழர் கட்சி சீமான் விமர்சனம்

தமிழ்நாட்டில் 50ஆண்டுகளுக்கு மேலாக கடைபிடிக்கப்பட்டு வரும் ஒரு அரசியல் சித்தாந்தத்தை மற்றொரு மாற்று சித்தாந்தத்தால் மட்டுமே வீழ்த்த முடியுமே தவிர சினிமாவால் வீழ்த்த முடியாது, கூட்டத்தை பார்க்காதீர்கள் கொள்கையை பாருங்கள். தவெக தலைவர் நடிகர் விஜய்-க்கு கூடும் மக்கள் கூட்டம் குறித்து பெரம்பலூரில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேட்டி அளித்துள்ளார்.
News September 21, 2025
பெரம்பலூரில் கல்வி கடன் வழங்கிய அமைச்சர்

பெரம்பலூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் அனைத்து வங்கிகளின் சார்பில் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக துணை மருத்துவ அறிவியல் கல்லூரியில், நடத்தப்பட்ட கல்வி கடன் முகாமினை போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் துவக்கி வைத்தார். மேலும் மாணவர்கள், மாணவிகளுக்கு கல்விக் கடன்களை வழங்கினார். அவருடன் மாவட்ட ஆட்சித் தலைவர் மிருணாளினி கலந்து கொண்டார்.