News April 26, 2025
பள்ளி ஆசிரியர்களுக்கு கலெக்டர் அட்வைஸ்

நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மாணவர்களுக்கு போதை பொருட்களை விற்பனை செய்வோர் மற்றும் போதை பொருள் தடுப்பு செயலியின் பயன்பாடுகளை அதிகரிக்க தேவையான விழிப்புணர்வு குறித்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் கல்லூரி முதல்வர்களுடனான ஆலோசனைக் கூட்டம் ஆட்சியர் சுகுமார் தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில், ஆட்சியர், ஆசிரியர்களுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.
Similar News
News April 26, 2025
நெல்லை: பள்ளி சத்துணவு மையங்களில் வேலை

திருநெல்வேலி மாவட்டத்தில் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் சத்துணவு திட்டத்தின் கீழ் இயங்கி வரும் பள்ளி சத்துணவு மையங்களில் 119 சமையல் உதவியாளர்(பெண்) காலி பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்பட உள்ளது. இதில் ரூ.3,000 – ரூ.9,000 ஊதியம் வழங்கப்படும் நிலையில் இதற்கு விண்ணப்பிக்க இன்றே(ஏப்.26) இன்றே கடைசி நாளாகும். ஆர்வமுள்ளவர்கள் இங்கே <
News April 26, 2025
காட்டுப்பன்றியை சுட்டு பிடிக்க துப்பாக்கி வாங்க ரூ.5 கோடி

களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக அம்பை கோட்ட துணை இயக்குனர் இளையராஜா நேற்று வெளியிட்ட செய்தி குறிப்பில், காட்டு பன்றிகளின் அட்டகாசத்தை தடுப்பதற்கு அரசு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது .விளை நிலங்களில் புகும் காட்டுப் பன்றிகளை சுட்டுக் கொள்ள துப்பாக்கி வாங்க வனத்துறைக்கு ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதாக தெரிவித்தார்.
News April 26, 2025
நெல்லை முக்கிய ரயிலில் 3ஆம் தேதி முதல் புதிய மாற்றம்

நெல்லை – செங்கோட்டை இடையே இயக்கப்படும் பயணிகள் ரயிலில் 12 பெட்டிகள் மட்டுமே இணைக்கப்பட்டிருந்தன. இதனால் பயணிகள் நின்று கொண்டு பயணிக்கும் நிலை ஏற்பட்டது. இதுகுறித்து நெல்லை எம்பி ராபர்ட் ப்ரூஸ் ரயிலில் பயணம் செய்து பொதுமக்களிடம் குறைகளை கேட்டு தென்னக ரயில்வே அதிகாரிகளிடம் நேரில் முறையிட்டார். இதை அடுத்து வரும் 3ஆம் தேதி முதல் 16 பெட்டிகளுடன் ரயில் இயங்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.