News February 18, 2025
பள்ளி ஆசிரியர்களுக்கான மாபெரும் வேலைவாய்ப்பு

மதுரவாயல், ஆலப்பாக்கத்தில் உள்ள வேலம்மாள் வித்யாலயா பள்ளியில், தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கான மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் 22தேதி நடக்கிறது. தமிழ், ஆங்கிலம், இயற்பியல், வேதியியல், கணிதம், பொருளாதாரம், வரலாறு, இந்தி, அறிவியல் என 10,000 ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளார்கள். தொடர்புக்கு – 8248470862, 9442568675, 8015343462. இந்த வேலைவாய்ப்பு முகாம் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடக்கிறது.
Similar News
News April 21, 2025
காயங்களுடன் முதியவர் மரணம் – பின்னணி என்ன?

தியாகதுருகம் அடுத்த பெரியமாம்பட்டு ஏரியில் முதியவர் ஒருவர் ரத்த காயங்களுடன் இறந்து கிடப்பதாக நேற்று போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இன்ஸ்பெக்டர் மலர்விழி சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார்.அப்போது, இறந்தவர் சேலம் மாவட்டம் சின்னப்பம்பட்டி சேர்ந்த காந்தி,(70) என தெரியவந்தது. அவர் பெரியமாம்பட்டில் உள்ள அவரது மகள் விஜயாவை பார்க்க சென்ற நிலையில் சந்தேகத்திற்கிடமான வகையில் இறந்தார்.
News April 20, 2025
இரவு ரோந்து பணி போலீசார் விவரம் வெளியீடு

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில்(20.4.2025 ) இன்று இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை, இரவு ரோந்து பணிக்காக நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளின் பெயர் மற்றும் தொலைபேசி எண்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு மேற்கொண்ட அதிகாரிகளின் தொலைபேசி எண் மூலம் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News April 20, 2025
கள்ளக்குறிச்சி மாவட்ட வட்டாட்சியர் எண்கள்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள வட்டாட்சியர் எண்களை தெரிஞ்சிக்கோங்க மக்களே! கள்ளக்குறிச்சி-9445000519, 04151-222449, சங்கராபுரம்-9445000520, 04151-235329, திருக்கோவிலூர்-9445000521, 04153-252316, உளுந்தூர்பேட்டை-9445000522, 04149-222255, கல்வராயன் மலை-9488776061, சின்னசேலம்-9445461907, 04151-257400, வானாபுரம்-8946097728. *மிக முக்கிய எண்களான இவற்றை உடனே சேவ் பண்னுங்கள்.நண்பர்களுக்கும் பகிரவும்