News August 21, 2025
பள்ளி அருகே மயங்கி விழுந்த முதியவர் உயிரிழப்பு

குன்றத்தூர், சேக்கிழார் நகரைச் சேர்ந்த 76 வயதான நடராஜன், நேற்று தனது பேரப்பிள்ளைகளை அரசுப் பள்ளியில் விட்டுவிட்டு பேருந்து நிலையம் நோக்கிச் சென்றபோது மயங்கி விழுந்தார். சம்பவ இடத்திலேயே உயிரிழந்த அவரது உடலை, குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக போலீசார் அனுப்பி வைத்தனர். இது குறித்து குன்றத்தூர் போலீஸார் மேலும் விசாரித்து வருகின்றனர்.
Similar News
News August 20, 2025
காட்டாங்கொளத்துார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்

தாம்பரம் கட்டுப்பாட்டு அறைக்கு வந்த வெடிகுண்டு அழைப்பில், மறைமலை நகர் காட்டாங்கொளத்தூரில் உள்ள JRK பள்ளியில் வெடிகுண்டு வெடிக்கும் என மிரட்டல் விடுக்கப்பட்டது. பள்ளித் தேர்வுக்குப் படிக்காததால் விடுமுறை வேண்டும் என்பதற்காக, அதே பள்ளியில் படிக்கும் மாணவர் ஒருவர் இந்த மிரட்டல் அழைப்பை விடுத்தது தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் அந்த மாணவருக்கு எச்சரிக்கை விடுத்து அனுப்பி வைத்தனர்.
News August 20, 2025
முடிச்சூரில் வெள்ள முன்னெச்சரிக்கை பணி ஆய்வு

முடிச்சூரில் வெள்ள முன்னெச்சரிக்கை பார்வையிட செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் மற்றும் டிஆர்ஓ வீடியோ தாசில்தார் மற்றும் அதிகாரிகள் மற்றும் முடிச்சூர் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் விநாயகம் மற்றும் கவுன்சிலர்கள் பொதுமக்கள் கலந்துகொண்டு வருகின்ற மழைக்காலங்களில் மழைநீர் செல்வதற்கு தேவையான ஏற்பாடுகள் மற்றும் வெள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க பார்வையிட்டனர்.
News August 20, 2025
செங்கல்பட்டு: ஃபீஸ் இல்லாமல் வக்கீல் வேண்டுமா?

செங்கல்பட்டு மாவட்டத்திற்கான இலவச சட்ட உதவி மையம், செங்கல்பட்டு மாவட்ட நீதிமன்றத்தில் இயங்கி வருகிறது. நீங்கள், அங்கு சென்று சட்ட ஆலோசனைகளை இலவசமாக பெறலாம். மாவட்ட இலவச சட்ட உதவி மையம் -044-27428840, (தமிழ்நாடு) அவசர உதவி – 044–25342441, TOLL FREE – 1800 4252 441, சென்னை ஐகோர்ட் – 044-29550126, ஐகோர்ட் மதுரை கிளை – 0452-2433756 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளுங்கள். ஷேர் செய்யுங்கள். <<17461769>>தொடர்ச்சி<<>>