News September 20, 2024
பள்ளியில் வைத்து விஷம் குடித்ததால் பரபரப்பு

ஸ்ரீவி.,அருகே கிருஷ்ணன்கோவில் பகுதியைச் சேர்ந்த 17 வயது மாணவி ஸ்ரீவி.,புனித இருதய பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வருகிறார். இன்று காலை பள்ளிக்கு வந்த மாணவி வகுப்பறையில் வைத்து மக்காச்சோளம் பயிருக்கு தெளிக்கும் கலைக்கொல்லி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றார். அங்கிருந்த ஆசிரியர்கள் மாணவியை மீட்டு ஸ்ரீவி.,அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.நகர் போலீசார் விசாரணை.
Similar News
News August 23, 2025
விருதுநகரில் ரூ.5.62 லட்சம் மதிப்புள்ள கந்தகம் பறிமுதல்

பட்டம்புதூர் பகுதியில் காவல்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அதில் தடையில்லா சான்று பெறாமல் 16 டன் கந்தகம் கொண்டு வரப்பட்டது தெரியவந்தது. தொடர்ந்து லாரி ஓட்டுனரிடம் விசாரித்த போது அப்பகுதியில் உள்ள தனியார் தீப்பெட்டி ஆலைக்கு கொண்டு வந்தது தெரிய வந்தது. ரூ.5.62 லட்சம் மதிப்புடைய கந்தகத்தை தடையில்லா சான்று பெறாமல் கொண்டு வந்த லாரி ஓட்டுனர் உள்ளிட்ட இருவரை போலீசார் கைது செய்தனர்.
News August 23, 2025
விருதுநகர் தவெக நிர்வாகி மறைவுக்கு விஜய் இரங்கல்

தவெக தலைவர் விஜய் இரங்கல் குறித்து அறிக்கை ஒன்றினை வெளிட்டுள்ளார். அதில், விருதுநகர் மாவட்டத்திலிருந்து K.காளிராஜ் உட்பட மூவர் மதுரை மாநாட்டில் காலமான செய்தி மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. அவர்கள் கழகத்திற்காக செய்த பணி என்றும் நினைவில் நிலைக்கும். குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபம். அவர்களது குடும்பங்களுக்கு கழகம் என்றும் துணையாக இருக்கும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
News August 23, 2025
விருதுநகரில் இலவச வக்கீல் சேவை! SAVE பண்ணிக்கோங்க

விருதுநகர் மாவட்ட நீதிமன்றத்தில் இலவச சட்ட உதவி மையம் செயல்படுகிறது.இங்கு நீங்கள் நேரடியாகச் சென்று, எவ்வித கட்டணமும் இன்றி சட்ட ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளலாம் ▶️விருதுநகர் மாவட்ட இலவச சட்ட உதவி மையம் 04563-260310 ▶️ தமிழ்நாடு அவசர உதவி: 044-25342441 ▶️ Toll Free 1800 4252 441 ▶️சென்னை உயர் நீதிமன்றம்: 044-29550126 ▶️உயர் நீதிமன்ற மதுரை கிளை: 0452-2433756. ஷேர் பண்ணுங்க.