News December 17, 2025

பள்ளியில் மாணவர் மரணம்.. நேரில் விரையும் அமைச்சர்?

image

திருவள்ளூர், கொண்டாபுரம் அரசு பள்ளியில் சுவர் இடிந்து விழுந்து <<18580609>>மாணவன் <<>>உயிரிழந்தது மிகப்பெரிய விவாதமாக மாறியுள்ளது. இந்நிலையில், மாணவனின் உடலை வாங்க மறுப்பு தெரிவித்து, பெற்றோர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மாணவனின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப்பணி மற்றும் ₹1 கோடி நிவாரண நிதி கோரி போராட்டம் நடைபெறுகிறது. இதனால், சமாதான பேச்சுவார்த்தை நடத்த அமைச்சர் அன்பில் நேரில் செல்லவுள்ளதாக கூறப்படுகிறது.

Similar News

News December 19, 2025

மீண்டும் சூடுபிடிக்கும் கோடநாடு வழக்கு!

image

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் 3 பேருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து நீலகிரி கோர்ட் உத்தரவிட்டுள்ளது. இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது அரசு தரப்பு, CBCID போலீசார் ஆஜராகினர். ஆனால், தீபு, சதீசன், சந்தோஷ் சாமி ஆகிய 3 பேர் ஆஜராகாததால் அவர்களுக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிபதி முரளிதரன் உத்தரவிட்டுள்ளார். கோடநாடு வழக்கின் விசாரணை மீண்டும் சூடுபிடித்துள்ளது.

News December 19, 2025

யார் இந்த ஷெரிஃப் உஸ்மான் ஹாடி?

image

ஒட்டுமொத்த <<18609087>>வங்கதேசத்தையும் மீண்டும் கலவர பூமியாக<<>> மாற்றியுள்ளது, ஷெரிஃப் உஸ்மான் ஹாடியின் மரணம். இவர் முன்னின்று நடத்திய போராட்டமும் ஷேக் ஹசீனாவின் ஆட்சி கவிழ்ந்ததற்கு ஒருவித காரணமாகும். உஸ்மான் ஹாடி ஆற்றிய உரைகளால் ஈர்க்கப்பட்ட Gen Z தலைமுறை அவரை ஹீரோவாக கொண்டாட தொடங்கியது. அடுத்தாண்டு பிப்ரவரியில் நடக்கவுள்ள பொதுத்தேர்தலில் போட்டியிட தயாராகி வந்த நிலையில், சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

News December 19, 2025

2 ஆண்டு சிறை தண்டனை.. அமைச்சர் ராஜினாமா

image

மோசடி வழக்கில் 2 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற மகாராஷ்டிர அமைச்சர் மாணிக்ராவ் கோகடே தனது பதவியை ராஜினாமா செய்தார். தேசியவாத காங்கிரஸை சேர்ந்த இவர் விளையாட்டு, இளைஞர் நலன் துறைகளின் அமைச்சராக இருந்தார். 1989 – 1992 காலகட்டத்தில் ₹30,000-க்கும் குறைவான ஆண்டு வருமானம் கொண்ட பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களுக்கான திட்டத்தில், போலி ஆவணங்கள் மூலம் அப்ளை செய்ததே தற்போது பதவி பறிபோக காரணமாக அமைந்துள்ளது.

error: Content is protected !!