News March 24, 2025

பள்ளியில் பாட்டு பாடிய சரித்திர குற்றவாளி

image

ஆம்பூர் அருகே கன்றாம்பள்ளி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஆண்டு விழா நடைபெற்றது. விழாவில், பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய சரித்திர குற்றவாளி கணேஷ் பங்கேற்று குத்து பாடல் பாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. அரசுப் பள்ளி விழாவில் அவர் எப்படிக் கலந்து கொண்டார்? யார் அனுமதி அளித்தனர்? என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News

News April 9, 2025

MRF டயர் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு

image

ராணிப்பேட்டையில் இயங்கிவரும் MRF டயர் நிறுவனத்தில் Lead Trainee பணிக்கான 100 இடங்கள் நிரப்பப்பட உள்ளது. BA, BSC, BBA, BCA, B.Com அல்லது Diploma ஆகிய படிப்புகளில் ஏதாவது ஒன்றில் தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும்.18-25 வயதுக்குள் இருக்கும் ஆண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம். ரூ.19,500 சம்பளம் வழங்கப்படும். மானிய விலையில் உணவக வசதி, மானிய போக்குவரத்து வசதி, இலவச காலனி, சீருடை வழங்கபடும். <>விண்ணப்பிக்கலாம்<<>>.

News April 9, 2025

திருப்பத்தூர் மாவட்டத்தில் நாளை மது கடைகளுக்கு விடுமுறை

image

திருப்பத்தூர் மாவட்டத்தில் மாநில வாணிபக் கழகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் அனைத்து டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனை கடைகள், மதுபான கடைகளை ஒட்டி உள்ள மது கூடங்கள் நாளை 10 ம் தேதி வியாழக்கிழமை மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு ஒரு நாள் மட்டும் விடுமுறை. மீறி மதுபானம் விற்பனை செய்வதாக தெரியவந்ததால் நடவடிக்கை எடுக்கப்படும் என திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.

News April 9, 2025

தாய் கண்டித்ததால் எருக்கம் பால் குடித்த மாணவி 

image

ஜோலார்பேட்டை அடுத்த கட்டேரி சேர்ந்தவர் செந்தில் இவரது மகள் மதுமிதா (வயது 15). இவர் தாமலேரிமுத்தூர் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் நேற்று இவரது தாயார் தனது மகளை கண்டித்தார். இதனால் மாணவி பள்ளி அருகே எருக்கம் பால் குடித்து மயங்கி விழுந்தார். திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.ஜோலார்பேட்டை போலீசார்  விசாரணை செய்து வருகின்றனர்.

error: Content is protected !!