News January 1, 2026
பள்ளிபாளையத்தில் அதிரடி முடிவு!

பள்ளிபாளையம் அடுத்துள்ள தொட்டிக்காரன் பாளையத்தில் கறிக்கோழி பண்ணையாளர்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், கறிக்கோழி வளர்ப்புக் கூலியாக ஒரு கிலோவிற்கு ரூ.20-ம், நாட்டுக்கோழிக்கு ரூ.75-ம், காடைகளுக்கு ரூ.7-ம் வழங்க வேண்டும் இதனை ஏற்காத கறிக்கோழி நிறுவனங்களைக் கண்டித்து, இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாகப் பண்ணையாளர்கள் சங்கம் முடிவெடுத்துள்ளது.
Similar News
News January 9, 2026
திரைபடத்தில் களம் இறங்கிய நாமக்கல் எம்பி!

திண்டுக்கல் ஐ.லியோனியின் மகன் லியோ சிவக்குமாா் கதாநாயகனாக நடிக்கும் ‘டெலிவரி பாய்’ படத்தில் சிறப்பு தோற்றத்தில் நாமக்கல் மக்களவை உறுப்பினா் வி.எஸ்.மாதேஸ்வரன் நடித்துள்ளாா். இதுகுறித்து அவா் கூறியதாவது: அரசியலுக்கு வருவதற்கு முன்பே சிறு, சிறு வேடங்களிலும் நடித்துள்ளேன். அந்த வகையில் டெலிவரி பாய் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்க அழைப்பு வந்தது. அதனால் ஏற்றுக்கொண்டு நடித்தேன் என்றார்.
News January 9, 2026
நாமக்கல்லில் இனி அலைய வேண்டாம்!

நாமக்கல் மக்களே பிறப்பு/இறப்பு சான்றிதழ், வருமான சான்று, பட்டா, சொத்துவரி, வேளான் திட்டங்கள்,மாணவர்களுக்கு உதவித்தொகை மற்றும் மின்சாரக் கட்டணம் செலுத்துதல் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட அரசு சேவைகளை இனி வாட்ஸ்அப் மூலமாகவே பொதுமக்கள் எளிதாகப் பெறலாம். இதற்காகத் தமிழக அரசு 7845252525 என்ற பிரத்யேக வாட்ஸ்அப் எண்ணிற்கு ‘Hi’ என மெசேஜ் அனுப்பினால் போதும். இதனை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!
News January 9, 2026
நாமக்கல்: இரவு ரோந்து செல்லும் போலீசார் விவரம்

நாமக்கல் மாவட்டத்தில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில், நேற்று(ஜன.8) இரவு 10 மணி முதல் இன்று (ஜன.9) காலை 6 மணி வரை இரவு நேர காவல் ரோந்து பணிக்காக காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். குற்றச் செயல்களைத் தடுக்கும் வகையில் மற்றும் சட்ட ஒழுங்கை பராமரிக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்களது பகுதி காவல் அதிகாரியை நேரடியாக தொடர்பு கொள்ளலாம்.


