News February 7, 2026
பள்ளிக் காதலை நினைவூட்டும் With Love

திருமணத்திற்கு தயாராகும் அபிஷன், அனஸ்வரா தங்களது முதல் காதலை உரியவர்களிடம் சொல்லிவிட்டு வாழ்க்கையை தொடங்க திட்டமிடுகின்றனர். இந்த பயணத்தில் இருவரும் உணர்ந்துகொள்ளும் விஷயங்களே With Love.
பிளஸ்: அறிமுக படத்திலேயே அபிஷன் கலக்கல், கலகலப்பான 2-ம் பாதி, நாஸ்டால்ஜிக் பள்ளிக் காதல், ஷான் ரோல்டனின் பாடல்கள் பல்ப்ஸ்: ஸ்லோவான முதல் பாதி, பழகிப்போன காதல் காட்சிகள், யூகிக்கக்கூடிய கதைக்களம் Rating: 2.5/5
Similar News
News February 14, 2026
தங்கம் விலை.. மக்களுக்கு நிம்மதி

தங்கம் விலை சில வாரங்களாக ₹5,000, ₹10,000 என தொடர்ந்து உயர்ந்து மக்களுக்கு பேரதிர்ச்சியை கொடுத்தது. ஆனால், இந்த வாரம் சற்று நிம்மதி அளித்துள்ளது. இந்த வார வர்த்தக முடிவில், 22 கேரட் தங்கம் 1 கிராம் ₹14,560-க்கும், 1 சவரன் ₹1,16,480-க்கும் விற்கப்பட்டு வருகிறது. இது கடந்த வாரத்தைவிட ₹1,120 அதிகம். அதேநேரம், வெள்ளி விலை முந்தைய வாரத்தைவிட கிலோவுக்கு ₹5,000 குறைந்து ₹2.80 லட்சத்திற்கு விற்பனையாகிறது.
News February 14, 2026
நயினாரின் சர்ச்சை கருத்துக்கு திமுக ரியாக்ஷன்

RSS-ன் அடிமையாக மாறிவிட்டதாலேயே <<19135589>>விஜய் – த்ரிஷா<<>> பற்றி சர்ச்சைக்குரிய வகையில் நயினார் பேசியிருப்பதாக TKS இளங்கோவன் விமர்சித்துள்ளார். MGR போன்ற தலைவர்களை பின்பற்றிய நயினார், இத்தகைய தரம் தாழ்ந்த பேச்சுகளை தவிர்த்திருக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். பெண்களை சரிசமமாக நடத்தாமல், மோசமாக நடத்தும் மனுதர்மத்தை பாஜக தலைவர்கள் பின்பற்றுவதால்தான், தமிழர்கள் பாஜகவை ஏற்பதில்லை என்றும் அவர் சாடியுள்ளார்.
News February 14, 2026
BREAKING: அதிமுகவில் இருந்து விலகினார்

முன்னாள் அமைச்சர் நிலோபர் கபில், அதிமுகவில் இருந்து விலகியுள்ளார். தனது ராஜினாமா கடிதத்தை EPS-க்கு அவர் அனுப்பியுள்ளார். இதனிடையே, ஜோலார்பேட்டையில் இன்று நடைபெறவுள்ள திமுக வாக்குச்சாவடி பயிற்சி மாநாட்டிற்கு நிலோபர் கபில் சென்றுள்ளார். இதன்மூலம், அவர் திமுகவில் இணைவது உறுதியாகியுள்ளது. கே.சி.வீரமணி உடனான உள்கட்சி மோதலால், நிலோபர் கபில் இம்முடிவை எடுத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.


