News January 24, 2026

பள்ளிக் கட்டணங்களை கட்டுப்படுத்த புதிய கமிட்டி

image

TN-ல் பள்ளிக் கட்டணங்களை முறைப்படுத்தும் <<18943567>>திருத்த மசோதா<<>> சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. அதன்படி, Retd நீதிபதி தலைமையில் 7 பேர் கமிட்டி தனியார் பள்ளிகளின் கட்டணங்களை ஆராய்ந்து உச்சவரம்பை நிர்ணயிக்கும். 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை கட்டணங்கள் சீராய்வு செய்யப்படும். பெற்றோர் ஆசிரியர் கூட்டமைப்பின் கருத்தும் கேட்கப்படும் என்பது கூடுதல் தகவல். இது அமலுக்கு வரும்தேதி பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும்.

Similar News

News February 8, 2026

இன்று இதை செய்தால் தீராத கடனும் தீரும்

image

இரவு 8 – 11:30 மணிக்குள் எந்த நேரத்திலும் இந்த பரிகாரத்தை செய்யலாம். 4 மிளகை எடுத்துக்கொண்டு, நிலை வாசலுக்கு வெளியே வாருங்கள். குலதெய்வத்தை மனதார வேண்டி கையில் இருக்கும் மிளகை தலைக்கு இடது புறமாக 3 முறை மட்டும் சுற்றுங்கள். அதன் பிறகு, 4 மிளகையும் 4 திசைகளில் கண்ணுக்கு தெரியாமல் தூர எறிந்து விடுங்கள். அவ்வளவுதான். இப்பரிகாரத்தை 3 வாரம் தொடர்ந்து செய்தால், கஷ்டம் நீங்கும் என்பது ஐதீகம்!

News February 8, 2026

விஜய்க்கு எதிராக Edit செய்த போட்டோ வைரல்

image

தவெக கட்சி சார்ப்பில் தேர்தலுக்கான வேட்பாளர் விருப்ப மனு வழங்கும் நிகழ்வில், அக்கட்சியின் தலைவர் விஜய்யின் பெயரில் ஒரு விருப்ப மனு வழங்கப்பட்டது. அதில், விண்ணப்பதாரர் பெயர் என்று ’ஜோசப் விஜய்’ என்ற பெயர் மட்டுமே குறிப்பிடப்பட்டிருந்தது. அதில் தொகுதி என்று எதுவும் குறிப்பிடப்படவில்லை. ஆனால், இதனை Edit செய்து, தொகுதி என்ற இடத்தில் ‘பனையூர்’ என்று எழுதிருப்பதாக போலியான படத்தை வைரலாகி வருகின்றனர்.

News February 8, 2026

தங்கம் விலை தடாலடியாக மாறியது

image

வரலாறு காணாத உச்சத்தை எட்டிய ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த சில நாள்களாக ஏற்ற, இறக்கமாக இருக்கிறது. ஜன.29-ல் ஒரு சவரன் ₹1,34,400 ஆக விற்பனையான நிலையில், நேற்று ₹1,15,360-க்கு விற்பனை செய்யப்பட்டது. அதாவது 10 நாள்களில் சவரனுக்கு ₹19,040-ஐ குறைந்துள்ளது. தற்போது சர்வதேச சந்தை ஏற்ற, இறக்கமாக இருப்பதால், வரும் நாள்களில் விலையில் மிகப்பெரிய மாற்றம் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.

error: Content is protected !!