News February 7, 2026
பள்ளிக்கரணை: இளம்பெண் தீக்குளித்து தற்கொலை

பள்ளிக்கரணை மின்வாரிய அலுவலகம் அருகே 35 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் உடல் கருகிய நிலையில் பிணமாக கிடந்தார். பள்ளிக்கரணை போலீசார் பெண் உடலை கைப்பற்றி விசாரித்ததில், இறந்தவர் அதேப் பகுதியை சேர்ந்த நிவேதிதா (30) என்பது தெரியவந்தது. கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பெட்ரோல் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்தது தெரிந்தது. இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Similar News
News February 14, 2026
சென்னை: வாக்காளர்கள் கவனத்திற்கு…

சென்னை மக்களே வரைவு வாக்காளர் பட்டியலில் உங்களது பெயர் உள்ளதா? என்பதை அறிய மிகவும் எளிய வழி ‘1950’ என்ற எண்ணிற்கு SMS அனுப்பி தெரிந்துகொள்ளலாம். அதற்கு ‘ECI உங்கள் EPIC எண்’ (எ.கா.:- ECI SXT000001) என டைப் செய்து ‘1950’ என்ற எண்ணிற்கு அனுப்பினால், அடுத்த சில நொடிகளில் உங்களின் பெயர், வரிசை எண், பாகம், தொகுதி என அனைத்தும் குறுஞ்செய்தியாக வரும். இதனை அனைவருக்கும் அதிகமாக ஷேர் பண்ணுங்க!
News February 14, 2026
சென்னையில் பைக் வாங்க ரூ.50,000 மானியம்!

இந்திய அரசு கடந்த ஆண்டு பிரதம மந்திரி இ-டிரைவ் (PM E-DRIVE) என்ற புதிய திட்டத்தைத் தொடங்கியுள்ளது. இத்திட்டத்தின் கீழ், பொதுமக்கள் எலக்ட்ரிக் வாகனங்களை எளிதாக வாங்க முடியும். இருசக்கர வாகனங்களுக்கு ரூ.10,000 வரையும், 3சக்கர வாகனங்களுக்குரூ.25,000-ரூ.50,000 வரையும் மானியம் வழங்கப்படுகிறது. புதிய வாகனம் வாங்க ஆசைப்படுபவர்கள் <
News February 14, 2026
சென்னை: பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000

பெண் குழந்தைகளுக்கு ”முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம்” மூலம் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000, அதுவே 2 பெண் குழந்தைகள் இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இதற்கு உங்கள் அருகிலுள்ள இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம். விவரங்களுக்கு மாவட்ட சமூக நல அலுவலத்தை அணுகவும். நல்ல தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!


