News January 24, 2026
பள்ளிகள் விடுமுறை.. கூடுதல் சிறப்பு பஸ்கள் அறிவிப்பு

குடியரசு தின விடுமுறை இன்று முதல் தொடங்குவதால் பள்ளி மாணவர்கள் குஷியில் உள்ளனர். சொந்த ஊருக்கு பயணிகள் சிரமமின்றி செல்வதற்கு ஏதுவாக சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இருந்து 1,350 சிறப்பு பஸ்கள் நேற்று முதல் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், சொந்த ஊர்களில் இருந்து சென்னை திரும்புவதற்காக 800 சிறப்பு பஸ்கள் இயக்கப்படவுள்ளன. எனவே, இங்கே <
Similar News
News February 20, 2026
அரியலூர்: ரூ.6.40 கோடி மதிப்பீட்டில் கல்வி கடன் உதவி

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று கல்வி கடன் மேளா நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் 107 மாணவ, மாணவிகளுக்கு ரூ.6.40 கோடி மதிப்பீட்டில் கல்வி கடன் உதவிகளை மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி வழங்கினார். இதில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் சிவராமன் உள்ளிட்ட அரசு துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.
News February 20, 2026
மகளை பெற்ற தந்தையா… ஹேப்பி நியூஸ்

மகள்களை பெறாத தந்தையரை விட, மகள்களை பெற்ற தந்தையர் 2 ஆண்டுகள் கூடுதலாக வாழ்வதாகவும், அவர்களின் மனநலமும், சுயமதிப்பும் சிறப்பாக உள்ளதாகவும் போலந்து ஆய்வில் தெரிய வந்துள்ளது. மகன்கள் இருந்தாலும், இல்லையென்றாலும் மகள்கள் இருந்தால் சராசரியாக 74 வாரங்கள் தந்தையரின் ஆயுள் கூடுகிறதாம். அதேபோல குழந்தைகள் இல்லாத பெற்றோரை விட, குழந்தைகள் உள்ள பெற்றோர் ஆரோக்கியமாகவும் நீண்ட ஆயுளுடனும் வாழ்கிறார்களாம்.
News February 20, 2026
மீண்டும் ஒரு லாக்கப் மரணம்: நயினார்

புழல் சிறையில் காவலர்கள் தாக்கியதில் விசாரணை கைதி ஒருவர் உயிரிழந்ததாக வெளியான தகவல் அதிர்ச்சியளிப்பதாக நயினார் கூறியுள்ளார். குற்றங்களை கட்டுப்படுத்துவதை விடுத்து, குற்றம் புரிந்ததாக சந்தேகப்படுவோரை தாக்கி உயிரைப் பறிப்பது தான் CM ஸ்டாலினின் இரும்புக்கர ஆட்சியா என தனது X பதிவில் கேள்வி எழுப்பியுள்ளார். தீவிர விசாரணைக்கு உத்தரவிட்டு இதிலுள்ள மர்மம் விலக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.


