News February 25, 2026
பள்ளிகளுக்கு விடுமுறை.. கலெக்டர்கள் அறிவிப்பு

அய்யா வைகுண்டசாமியின் 194-வது அவதார தினத்தையொட்டி மார்ச் 4 அன்று குமரி, தென்காசி, நெல்லை மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனை ஈடுசெய்ய மேற்கூறிய மாவட்டங்களில் மார்ச் 7-ல் பள்ளிகள் செயல்படும். மேலும், மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் திருவிழாவையொட்டி, மார்ச் 10-ல் குமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டு, அதனை ஈடு செய்ய மார்ச் 14 வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News February 28, 2026
விரைவில் கரும்பு விவசாயிகளின் வங்கிக் கணக்கில் பணம்..

2025 – 26 அரவை பருவத்திற்கு சர்க்கரை ஆலைகளுக்கு கரும்பு வழங்கும் விவசாயிகளுக்கு கிரயத் தொகை வழங்க ஏதுவாக ₹86.22 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன்படி, கரும்பு விவசாயிகளின் வங்கிக் கணக்கில் சிறப்பு ஊக்கத்தொகை விரைவில் வரவு வைக்கப்படவுள்ளது. 2024 -25 அரவைப் பருவத்தில் கரும்பு டன் ஒன்றுக்கு ₹349 என்ற உயர்த்தப்பட்ட சிறப்பு ஊக்கத்தொகை, 90,652 விவசாயிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டிருந்தது.
News February 28, 2026
மின்னிய தங்கமும் வைரமும்.. நகைக்கு மட்டும் இவ்வளவா?

விலையுயர்ந்த வைரங்களையும், தங்கத்தாலும் இழைக்கப்பட்ட நகைகளையும் திருமணத்தின் போது விஜய், ரஷ்மிகா அணிந்திருந்தனர். ஹைதராபாத்தில் 10 மாதங்கள் செதுக்கப்பட்டு பிரத்யேகமாக இவை உருவாக்கப்பட்டதாம். ரஷ்மிகா தாலி, வளையல்கள், நெக்லஸ் என சுமார் 2 கிலோ எடை கொண்ட 11 வகையான நகைகளை அணிந்திருந்தார். இவை ₹3 – 5 கோடி மதிப்பு கொண்டவையாம். விஜய் ₹2 கோடி மதிப்புடைய 1 கிலோ எடையுள்ள நகைகளை, அணிந்திருந்தாராம்.
News February 28, 2026
விஜய்க்கு இப்போதும் சங்கீதாதான் மனைவி

விவாகரத்துக்கோரி மனைவி சங்கீதா வழக்குத் தொடர்ந்ததால், விஜய் தேர்தலில் போட்டியிடுவதில் சிக்கல் வருமா என கேள்வி எழுந்தது. ஆனால், தீர்ப்பு வரும் வரை, விஜய்க்கு சங்கீதாதான் சட்டப்படி மனைவி. தேர்தலுக்குள் விவாகரத்து வழக்கில் தீர்ப்பு வர வாய்ப்பில்லை என்பதால், விஜய் தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்யும்போது மனைவி என்ற அடிப்படையில் சங்கீதாவின் அனைத்து விவரங்களையும் கட்டாயம் தெரிவிக்க வேண்டும்.


