News February 19, 2026

பள்ளிகளுக்கு விடுமுறை.. கலெக்டர் அறிவிப்பு

image

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் திருத்தேர் உற்சவத்தை முன்னிட்டு வரும் 21-ம் தேதி விழுப்புரம் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம், பள்ளி, கல்லூரிகள், மாநில அரசு அலுவலகங்கள் இயங்காது என கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் தெரிவித்துள்ளார். அதேபோல், பொன் மாரியம்மன் கோயில் திருவிழாவையொட்டி, தருமபுரி மாவட்டத்தில் பாலக்கோடு வட்டத்திற்கு பிப்.25 அன்று உள்ளூர் விடுமுறையாகும்.

Similar News

News March 2, 2026

கமேனியின் மரணத்திற்கு இந்தியர்கள் ஏன் அழுகிறார்கள்?

image

ஈரான் தலைவர் கமேனி மரணத்துக்கு இந்திய முஸ்லிம்கள் ஏன் அழுகிறார்கள் என்ற கேள்வி எழலாம்? அயதுல்லா அலி கமேனி, ஈரான் உயர் தலைவர் மட்டுமல்ல. Shia clergy எனப்படும் ஷியா முஸ்லிம்களின் மத அறிஞர்களின் வரிசையில் முக்கிய ஆன்மிக வழிகாட்டிகளில் ஒருவராகவும் அயதுல்லா அலி கமேனி கருதப்பட்டார். இதனால், அவரை தங்களின் அரசியல் & மத வழிகாட்டியாக மதித்த ஷியா முஸ்லிம்கள் வேதனையில் கண்ணீர் சிந்தி வருகின்றனர்.

News March 2, 2026

BREAKING: திமுக முடிவு.. திருமாவளவன் அதிர்ச்சி

image

திமுக கூட்டணியிலுள்ள தேமுதிகவுக்கு 1 ராஜ்யசபா சீட் வழங்க CM ஸ்டாலின் முன்வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக, தேமுதிக பொருளாளர் சுதீஷ், ராஜ்யசபா MP பதவிக்கு வேட்புமனு தாக்கல் செய்யவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக, 6 + 1 சீட் கொடுக்க திமுக சம்மதித்ததாக கூறப்பட்டது. இது, இன்று ராஜ்யசபா சீட் கேட்க திட்டமிட்டுள்ள விசிகவுக்கு சற்று அதிர்ச்சியை கொடுத்துள்ளதாம்.

News March 2, 2026

உங்க வீட்டிலும் இதை கண்டிப்பா பண்ணுங்க!

image

சம்மர் சீசன் தொடங்குவதற்கு முன்பே, வெப்பநிலை அதிகரித்து நாம் இன்னலை சந்திக்கிறோம். இதனால் அதிகளவில் தண்ணீரை பருகும் படி டாக்டர்கள் அறிவுறுத்துகிறார்கள். மனிதர்களுக்கே இந்த நிலை என்றால், விலங்குகள், பறவைகள் நிலை என்ன? தண்ணீருக்காக அவை போராடுகின்றன. வீட்டு வாசலில் நீர் தொட்டிகளில் தண்ணீரையும், சில உணவு தானியங்களையும் பறவைகளுக்காக வையுங்கள். இது ஒரு அடிப்படை மனிதாபிமானம். SHARE IT.

error: Content is protected !!