News January 1, 2026

பள்ளிகளுக்கு மேலும் விடுமுறை.. அரசு அறிவிப்பு

image

அரையாண்டு விடுமுறை முடிந்து பள்ளிகள் ஜன.5-ல் திறக்கப்படவுள்ளன. இந்நிலையில், பொங்கல் பண்டிகை (ஜன.15, 16, 17), குடியரசு தினம்( ஜன.26) என அரசு விடுமுறைகள் அடுத்தடுத்து வருகின்றன. மேலும், வார விடுமுறை உள்ளிட்டவற்றை கணக்கிட்டால் ஜனவரியில் மொத்தம் 15 நாள்கள் விடுமுறையாகும். 2026-ம் ஆண்டில் மொத்தமாக 26 நாள்கள் அரசு விடுமுறை என தமிழக அரசு அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Similar News

News February 3, 2026

ஜெயக்குமார் அதிமுகவில் இருந்து விலகினாரா? CLARITY

image

கடந்த சில மாதங்களாக தலைகாட்டாமல் இருந்த அதிமுக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார், விரைவில் கட்சியில் இருந்து விலகி வேறு கட்சியில் இணையவுள்ளதாக தகவல் வெளியானது. இந்நிலையில், தனது உயிர் உள்ளவரை அதிமுகவிலேயே நீடிப்பேன் என, கட்சி மாறப்போவதாக வெளியான தகவலுக்கு மறுப்பு தெரிவித்துள்ளார். மேலும், வரும் தேர்தலில் தொகுதி மாறப் போவதாக (தற்போது ராயபுரம்) வரும் தகவலிலும் உண்மையில்லை என தெளிவுபடுத்தியுள்ளார்.

News February 3, 2026

பிணையம் இல்லாமல் ₹10 லட்சம் லோன்.. அடடே ஸ்கீம்!

image

உங்கள் வீட்டுப் பெண்கள் புதிய தொழில் தொடங்கும் யோசனையில் இருக்கிறார்களா? எந்த பிணையமும் இல்லாமல் அவர்களுக்கு ₹10 லட்சம் வரை கடன் வழங்குகிறது மகிளா உத்யம் நிதி யோஜனா திட்டம். இதன் மூலம் கடன் பெற விரும்பும் பெண்கள் குறைந்தது ₹5 லட்சத்தை தொழிலில் முதலீடு செய்திருக்கவேண்டும். கடனை திருப்பி அடைக்க 15 ஆண்டுகள் கொடுக்கப்படுகிறது. PNB வங்கியின் இணையதளத்தில் இதற்கு நீங்கள் அப்ளை செய்யலாம். SHARE.

News February 3, 2026

யாரையும் எதிரிகளாக பார்ப்பதில்லை: CM ஸ்டாலின்

image

தொகுதி பங்கீடு, கூட்டணி பேச்சுவார்த்தை பற்றி இன்னும் 2 நாள்களில் பணிகள் தொடங்கப்படும் என CM ஸ்டாலின் அறிவித்துள்ளார். கூட்டணி பேச்சுவார்த்தை குழுவும் விரைவில் அமைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், புதிய எதிரிகள் (விஜய்) பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்ற கேள்விக்கு, யாரையும் எதிரிகளாக பார்ப்பதில்லை, அனைவரையும் நண்பராகவே பார்க்கிறேன்; மதிக்கிறேன் என CM பதிலளித்தார்.

error: Content is protected !!