News December 29, 2025
பள்ளிகளுக்கு மேலும் விடுமுறை.. அரசு அறிவிப்பு

அரையாண்டு தேர்வு விடுமுறைக்கு பின் ஜன.5-ல் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட உள்ளன. இந்நிலையில், பள்ளிக்கல்வித் துறை நாள்காட்டிபடி, ஜனவரியில் மேலும் 4 நாள்கள் பள்ளிகளுக்கு விடுமுறையாகும். அதாவது, ஜன.15, 16, 17-ல் பொங்கல் பண்டிகை, ஜன.26 -ல் குடியரசு தினம் ஆகிய நாள்களில் பள்ளிகள் செயல்படாது. மேலும், 2026-ல் மொத்தமாக பள்ளிகளுக்கு 26 நாள்கள் அரசு விடுமுறையாகும். தொடர் விடுமுறையை கொண்டாடுங்கள் மாணவர்களே!
Similar News
News December 30, 2025
மதம் மாறியதால் நடந்த கொடுமை!

இறந்தவர்களை உரிய மரியாதையுடன் வழியனுப்புவது என்பது மனிதகுலத்தின் மாபெரும் கடமைகளில் ஒன்று. ஆனால் சத்தீஸ்கரில் 65 வயதான புனியா பாய் என்பவர் கிறிஸ்தவத்திற்கு மாறினார் என்ற ஒரே காரணத்திற்காக அவரது இறந்த உடலை 3 நாள்களாக அடக்கம் செய்ய ஊர்க்காரர்கள் அனுமதிக்கவில்லை. இறுதியாக புனியாவின் குடும்பத்தினர் மீண்டும் இந்து மதத்திற்கு மாறிய பிறகே இறுதிச்சடங்கு நடைபெற்றுள்ளது. மனிதம் மரித்துவிட்டதா?
News December 30, 2025
திருத்தணி தாக்குதல் சம்பவம்.. முறைத்ததால் தகராறு: IG

திருத்தணியில் <<18693605>>வடமாநில தொழிலாளியை<<>> கஞ்சா போதையில் சிறுவர்கள் தாக்கிய விவகாரம் குறித்து IG அஸ்ரா கர்க் விளக்கம் அளித்துள்ளார். தாக்குதல் நடத்திய 4 பேரில் 3 பேர் கூர்நோக்கு இல்லத்தில் சேர்க்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். மேலும், வடமாநிலத்தவர் என்பதற்காக அல்ல, முறைத்து பார்த்ததால் தகராறு ஏற்பட்டது என்றும் பாதிக்கப்பட்டவர் அரசு ஹாஸ்பிடலில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
News December 30, 2025
2025-ன் பெஸ்ட் பேட்டர் & பவுலர் இவுங்கதானா?

2025-ம் ஆண்டின் சிறந்த பேட்ஸ்மேன் & பவுலர் யார் என்பதை அஸ்வின் தேர்வு செய்துள்ளார். அதன்படி, வருண் சக்கரவர்த்தியை சிறந்த பந்து வீச்சாளராக தேர்வு செய்துள்ள அவர், 2026 T20 WC-ல் அவர்தான் முக்கிய பங்காற்றுவார் எனவும் கணித்துள்ளார். மேலும், அபிஷேக் சர்மாவை சிறந்த பேட்டராகவும் அஸ்வின் தேர்வு செய்துள்ளார். நீங்க சொல்லுங்க, 2025-ம் ஆண்டின் பெஸ்ட் இந்திய பவுலர், பேட்ஸ்மேன் யார்?


