News December 13, 2024
பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை

கனமழை எச்சரிக்கை காரணமாக புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று (டிச.13) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதையடுத்து, வானிலை ஆய்வு மைய எச்சரிக்கையை கருத்தில் கொண்டு, பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளித்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். ஷேர் பண்ணுங்க
Similar News
News November 9, 2025
புதுகை: இரவு ரோந்து பணி போலீசார் விபரம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று (நவ.08) இரவு 10 மணி முதல் இன்று (நவ.09) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர்கள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய மொபைல் எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. எனவே தேவையுள்ளவர்கள் இதனை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. இதனை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!
News November 8, 2025
வெள்ளனூர் அருகே பைக் மோதி இளைஞர் படுகாயம்

வெள்ளனூர் அடுத்த முத்துடையான்பட்டி சாலையில் உஜின் பிலாரன்ஷ்(18) என்பவர் நேற்று SOCயில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவருக்கு பின்புறம் பைக்கை ஓட்டி வந்த தியாகராஜன் (31) மோதியதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு மிகவும் ஆபத்தான நிலையில் புதுகை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து வெள்ளனூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News November 8, 2025
புதுக்கோட்டை: B.E முடித்தவர்களுக்கு ISRO-வில் வேலை!

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் (ISRO) பல்வேறு பிரிவுகளின் கீழ் 141 காலியிடங்கள் நிரப்பட உள்ளன.
1. வகை: மத்திய அரசு
2. சம்பளம்: ரூ.19,900 – 1,77,500/-
3. கல்வித் தகுதி: 10th, ITI, Diploma, B.Sc, B.E/B.Tech
5. வயது வரம்பு: 18-35 (SC/ST-40, OBC-38)
6. கடைசி தேதி: 14.11.2025
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
8. BE முடித்தவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!


