News January 6, 2026

பள்ளிகளில் நடக்கப்போகும் முக்கிய மாற்றம்

image

மாநில கல்விக் கொள்கைப்படி உருவாக்கப்பட்ட 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான பாடத்திட்டம் இன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. அதன்படி தமிழ், ஆங்கிலம், கணக்கு, அறிவியல், சூழ்நிலையியல், சமூக அறிவியல் பாடங்களில் புத்தகங்கள் பற்றி கல்வியாளர்கள், மக்கள் கருத்து கூறலாம் என அரசு தெரிவித்துள்ளது. எனவே, பாடத்திட்டத்தில் ஏதேனும் தவறுகள் இருந்தாலோ, திருத்தம் செய்யவேண்டும் என்றாலோ <>tnschools.gov<<>>-ல் தெரிவிக்கலாம்.

Similar News

News February 9, 2026

BREAKING: தமிழக கபடி வீராங்கனை விபத்தில் மரணம்

image

தமிழக கபடி வீராங்கனை தீபிகா விபத்தில் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு சித்தோடு அருகே ஸ்கூட்டரில் சென்றபோது நிலைதடுமாறி விழுந்துள்ளார். அப்போது பின்னால் வந்த கூரியர் வேன் தலை மீது ஏறியதில் சம்பவ இடத்திலேயே தீபிகா உயிரிழந்துள்ளார். தனியார் கல்லூரியில் MCA 2-ம் ஆண்டு படித்துவந்த அவர், தமிழ்நாடு கபடி அணியிலும் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியவர். <<-se>>#RIP<<>>

News February 9, 2026

தமிழன் மலேசியாவில் ஒன்னு, ஒடிசாவில் ஒன்னா? ரகுபதி

image

மலேசியாவில் தமிழர்களை புகழ்ந்து பேசும் PM மோடி, ஒடிசாவுக்கு சென்றால் தமிழர்களை திருடன் என பேசுவது ஏன் என அமைச்சர் ரகுபதி சாடியுள்ளார். PM மோடி தனது மலேசிய பயணத்தின்போது <<19077367>>தமிழ், தமிழர்களின் பண்பாடு சிறந்தது<<>> என புகழாரம் சூட்டியிருந்தார். அது குறித்து பேசிய அமைச்சர் ரகுபதி, இது முற்றிலும் நாடகம் எனவும், பாஜகவின் நாடகத்தை தமிழக முருக பக்தர்கள் அறிவார்கள் என்றும் கூறியுள்ளார். உங்கள் கருத்து என்ன?

News February 9, 2026

விசில் தடைக்கும் எங்களுக்கும் தொடர்பில்லை: TNCA

image

உலகக்கோப்பை போட்டியையொட்டி சேப்பாக்கம் மைதானத்திற்குள் விசில் தடை செய்யப்பட்ட விவகாரம் சர்ச்சையானது. இந்நிலையில், மைதானத்தில் விசில் தடை செய்யப்பட்டதில் தங்களுக்கோ BCCI-க்கோ தொடர்பில்லை என்று தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் (TNCA) விளக்கம் அளித்துள்ளது. தவெகவிற்கு விசில் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், உதயநிதி தொகுதியில் நடந்த இச்சம்பவத்தில் அரசியல் தலையீடு உள்ளதா என தற்போது கேள்வி எழுந்துள்ளது.

error: Content is protected !!