News December 26, 2024
பள்ளபட்டியில் இறகுபந்துபோட்டி: 80 அணிகள் பங்கேற்பு

பள்ளபட்டியில் மாவட்ட அளவிலான இறகுபந்துப் போட்டி நடைபெற்றது. இரண்டு பிரிவுகளாக நடந்த போட்டியில் கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த 80க்கும் மேற்பட்ட அணிகள் விளையாடின. குளித்தலையைச் சேர்ந்த ஹரி நவீன் ஆகியோர் முதலிடம் பெற்றனர். வெற்றி பெற்ற வீரர்களுக்கு கோப்பை ரொக்க பணம் பரிசாக வழங்கப்பட்டது. மற்ற அனைத்து விளையாட்டு வீரர்களுக்கும் பதக்கம் வழங்கப்பட்டது.
Similar News
News August 22, 2025
கரூர்: விநாயகர் சதுர்த்தி விழா குறித்து ஆலோசனை

கரூர்: குளித்தலை சப்-கலெக்டர் அலுவலக கூட்டரங்கத்தில், விநாயகர் சதுர்த்தி விழா தொடர்பாக அரசு அலுவலர்கள், ஹிந்து அமைப்பினர் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடந்தது. சப்-கலெக்டர் சுவாதி ஸ்ரீ தலைமை வகித்தார். குளித்தலை டி.எஸ்.பி செந்தில்குமார், குளித்தலை கிருஷ்ணராயபுரம் தாசில்தார்கள் நீதிராஜன், பிரபாகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
News August 22, 2025
கரூர்: செல்போன் தொலஞ்சிருச்சா? இத பண்ணுங்க!

உங்கள் Phone காணாமல் போனாலோ, திருடு போனாலோ பதற்றம் வேண்டாம்.<
News August 22, 2025
கரூர் மாவட்டத்தில் இன்று மின்தடை

கரூர்: மின் அலுவலகத்திற்கு உட்பட்ட சஞ்சய் நகர் மின்பாதையில் இன்று(ஆக.22) மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் அருள் நகர், சுந்தர் நகர், ஆத்தூர் பிரிவு, செல்லராபாளையம், திருமால் நகர் ,மருத்துவ நகர் ,அமிர்தாம்பாள் நகர், சஞ்சய் நகர், சாந்தி நகர் ,அர்ச்சனா நகர், அம்மன் சிட்டி, பழனியப்பா நகர், ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்ரத்து அறிவிக்கப்பட்டுள்ளது.