News March 13, 2026

பல வருட போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி: CM ஸ்டாலின்

image

OBC அல்லாத கிரீமி லேயர் நிர்ணயத்தை தெளிவுபடுத்தும் SC-ன் தீர்ப்பை தான் வரவேற்பதாக CM ஸ்டாலின் கூறியுள்ளார். அதன்படி இனி சம்பள வருமானத்தை கிரீமி லேயருக்கான வணிகம் அல்லது சொத்து வருமானத்துடன் சமப்படுத்த முடியாது; வேலைவாய்ப்புத் துறைகளில் விரோதமான பாகுபாட்டை இத்தீர்ப்பு நிராகரிக்கிறது என கூறியுள்ளார். பல வருட போராட்டத்திற்குப் பிறகு OBC நீதிக்கு கிடைத்த தீர்க்கமான வெற்றி எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Similar News

News April 2, 2026

நாகை: கடத்தலில் ஈடுட்ட 2 இளைஞர்கள் கைது

image

நாகை ரயில் நிலையத்தில் காரைக்காலில் இருந்து வேளாங்கண்ணிக்கு செல்லும் ரயிலில் ரயில்வே பாதுகாப்பு படையினர் சோதனை மேற்கொண்டனர். அப்போது 2 பேரிடம் 40 சாராயப்பாட்டிகள் இருந்தது தெரியவந்தது. இதுகுறித்து அவர்களிடம் விசாரணை மேற்கொண்டதில், 2 பேரும் மருந்து கொத்தளம் தெருவை சேர்ந்த அஜித்குமார்(27), செங்குட்டுவன்(35) என தெரியவந்தது. இதனையெடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்து, பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

News April 2, 2026

திமுக ஆட்சியில் 67% மின் கட்டண உயர்வு: EPS

image

திமுக ஆட்சியில் மின் கட்டணம் பற்றி கேட்டாலே ஷாக் அடிக்கிறது என EPS விமர்சித்துள்ளார். நகராட்சி, மாநகராட்சிகளில் மின் கட்டணத்தை 52% உயர்த்தியது மட்டுமில்லாமல் தொடர்ந்து 3 ஆண்டுகளில் தலா 5% உயர்த்தி அதை 67% வரை கொண்டு சென்றுவிட்டனர் எனவும் EPS குற்றஞ்சாட்டினார். கடைகளில் PEAK HOUR பயன்பாட்டிற்கு இரட்டிப்பு கட்டணம் வசூலிக்கின்றனர் என்ற அவர், இப்படியான அரசு தொடர வேண்டுமா எனவும் கேள்வி எழுப்பினார்.

News April 2, 2026

பண கஷ்டம் தீர பெளர்ணமியில் இத பண்ணுங்க!

image

பௌர்ணமியன்று அம்பாளை வழிபடுவது பண கஷ்டத்தை தீர்க்கும் என நம்பப்படுகிறது. பெளர்ணமி நேரத்தில் மல்லி பூ, சிவப்பு நிற அரளிப்பூ, செம்பருத்தி பூ, தாமரை பூ இவற்றில் ஏதாவது ஒன்றை அம்பாளுக்கு சமர்ப்பித்து, அதனுடன் ஒரு இனிப்பு பலகாரத்தையும் அம்பாளுக்கு நிவேதனம் செய்யலாம். மேலும், லலிதா சஹஸ்ரநாமம் சொல்லி மனமுருகி வேண்டுங்கள். பிரசாதத்தை 4 பேருக்கு கொடுத்தால், கர்ம வினைகள் குறைந்து, பணக்கஷ்டம் நீங்குமாம்.

error: Content is protected !!