News June 13, 2024
பல் மருத்துவக் கல்லூரியில் ரத்ததான முகாம்

நாமக்கல் ஆட்சித்தலைவர் அறிவுறுத்தலின்படி, நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை இரத்த வங்கிக்கு இன்று இரத்த தான முகாம் கேஎஸ்ஆர் பல் மருத்துவக் கல்லூரியில் நடத்தப்பட்டது.
முகாமை ரெட்கிராஸ் மாவட்ட செயலாளர் ராஜேஸ் கண்ணன் மற்றும் கல்லூரி முதல்வர் மருத்துவர் சரத் அசோகன் ஆகியோர் துவக்கி வைத்தார்கள். KSR பல் மருத்துவகல்லூரி யூத் ரெட் கிராஸ் மாணவ மாணவிகள் 50க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
Similar News
News May 8, 2025
நாமக்கல் மாணவி அசத்தல்!

தமிழகம் முழுவதும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று(மே.8) வெளியானது. இதில் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளியில் பயின்ற மாணவி கார்த்திகா, 598/600 மதிப்பெண்கள் எடுத்து அசத்தியுள்ளார். அவருக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். மேலும், பள்ளி ஆசிரியர்களும் மாணவிக்கு தங்களது பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.
News May 8, 2025
மார்கழியில் மட்டுமே காட்சி தரும் மரகத லிங்கம்!

நாமக்கல்: திருச்செங்கோடு மலையின் மீது அமைந்துள்ள அர்த்தநாரீஸ்வரர் கோயிலில் அர்த்தநாரீஸ்வரரும், தாயார் பாகம்பிரியாளும் அருள்பாலித்து வருகிறார்கள். இங்கு மார்கழி மாதம் மட்டும் மரகத லிங்கம் வைத்து வழிபாடு செய்யப்படுகிறது. மற்ற மாதங்களில் அதற்குப் பதிலாக வேறு ஒரு லிங்கம் வைத்து வழிபடுகிறார்கள். இந்த மரகத லிங்கத்தை தரிசனம் செய்ய காலை 5 மணிக்குள் கோவிலில் இருக்க வேண்டும். SHARE பண்ணுங்க!
News May 8, 2025
நாமக்கல்: 70 பள்ளிகள் 100% தேர்ச்சி

12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. இதில் நாமக்கல் மாவட்டத்தில் 195 பள்ளிகள் உள்ளது. அதில் 12 அரசு பள்ளிகள் உட்பட 70 பள்ளிகள் 100% தேர்ச்சி பெற்றுள்ளது. இதில் அரசு பள்ளி மாணவ, மாணவிகளில் 9343 பேரில் 8672 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்வு முடிவுகளை WAY2NEWSல் தொடர்ந்து பாருங்கள். (ஷேர் பண்ணுங்க)