News April 2, 2025
பல் சிகிச்சையால் தலைவலி: குடும்பத்தோடு சாலை மறியல்

காவல்காரன்பட்டியைச் சேர்ந்த வெண்ணிலா என்பவர் கடந்த 07.12.2025 அன்று பல் வலி காரணமாக வேர் சிகிச்சை மேற்கொண்ட நிலையில் தீராத தலைவரால் அவதிப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்டும் தலைவலி தீராததால் இன்று பல் மருத்துவமனை முன்பு சாலை மறியலில் ஈடுபட்ட நிலையில் அவர்களை காவல் நிலையம் அழைத்துச் சென்று போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Similar News
News April 3, 2025
திருவிழாவை முன்னிட்டு போக்குவரத்து மாற்றம்

திருச்சி மாவட்டம், தொட்டியம் மதுர காளியம்மன் தேர் திருவிழாவை முன்னிட்டு மாலை நேரங்களில் பக்தர்கள் கூட்டம் அதிகரிக்கும் என்பதால் திருச்சியில் இருந்து நாமக்கல் செல்லும் கனரக வாகனங்கள் மணமேட்டில் இருந்து பவித்திரம் செல்லும் சாலை வழியாக சென்று தோளூர்பட்டி இனைப்பு சாலை வழியாக நாமக்கல் புறவழி சாலையை அடையலாம் என காவல்துறையினரால் அறிவுறுத்தப்பட்டுள்ளது. SHARE NOW!
News April 3, 2025
வயலூர் முருகன் கோயிலில் சஷ்டி வழிபாடு

பங்குனி மாத வளர்பிறை சஷ்டியை முன்னிட்டு இன்று திருச்சி வயலூர் முருகன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. வளர்பிறை சஷ்டி நாட்களில் முருகனை வழிபட்டால் நீண்ட காலமாக தீராத பிரச்சனைகள் தீரும் என்பது ஐதீகம். அந்த வகையில் இன்று வயலூர் முருகன் கோவிலில் வளர்பிறை சஷ்டியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு முருகனை வழிபட்டு சென்றனர். SHARE NOW!
News April 3, 2025
மாணவர்களுக்கு பாலியல் தொல்லை: இருவர் கைது

சமயபுரத்தில் உள்ள அரசு உதவிபெறும் மேல்நிலை பள்ளி செயல்படுகிறது. இப்பள்ளி விடுதியில் தஞ்சாவூரை சேர்ந்த குழந்தைநாதன் விடுதி வார்டனாக பணிபுரிந்து வருகிறார். இவரது நண்பரான அரியலூரைச் சேர்ந்த சுந்தர்ராஜன் விடுதியில் உள்ள மாணவர்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இதையறிந்த லால்குடி அனைத்து மகளிர் போலீசார் விடுதி வார்டனையும், அவரது நண்பரையும் இன்று போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.