News September 26, 2024
பல்லாவரம், சோழிங்கநல்லூர் கோட்டத்தில் குறைதீர் கூட்டம்

பல்லாவரம் மற்றும் சோழிங்கநல்லூர் கோட்ட மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் நாளை (வியாழக்கிழமை) காலை 11.00 மணியளவில், பல்லாவரம் ஆபிசர்ஸ் லேனில் உள்ள செயற் பொறியாளர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. பொதுமக்கள் இந்த குறைதீர் கூட்டத்தில் கலந்து கொண்டு தங்கள் குறைகளை தெரிவித்து நிவாரணம் பெற்று கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News August 19, 2025
செங்கல்பட்டு: LIC-யில் ரூ.1 லட்சம் சம்பளத்தில் வேலை

செங்கல்பட்டு மக்களே, இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தில் (LIC) காலியாக உள்ள உதவி நிர்வாக அலுவலர்கள், உதவி பொறியாளர் உள்ளிட்ட 841 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு பட்டப்படிப்பு முடித்தவர்கள் முதல் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.88,635 முதல் ரூ.1,69,025 வரை சம்பளம் வழங்கப்படும். மேலும் விவரங்கள் (ம) விண்ணப்பிக்க <
News August 18, 2025
செங்கல்பட்டு இன்று இரவு ரோந்து பணி விவரம்

செங்கல்பட்டு மாவட்டம் இன்று (ஆகஸ்ட் 18) செங்கல்பட்டு மாமல்லபுரம் மதுராந்தகம் ஆகிய பகுதிகளில் இன்று இரவு ரோந்து பணி செய்யும் காவலர்கள் விவரம் கீழே உள்ள புகைப்படத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. காவல்துறையினர் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை ரோந்து பணியில் ஈடுபடுவார் பொதுமக்கள் ஏதேனும் அவசர தேவை என்றால் இந்த தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளவும். இரவு பணி செய்யும் பெண்களுக்கு இந்த செய்தியை ஷேர் செய்யுங்கள்.
News August 18, 2025
மாமல்லபுரம் கடலுக்கு அடியில் பழங்கால கட்டுமான சிதைவுகள்

மாமல்லபுரம் கடலில் நேற்று (ஆக. 18) தொல்லியல் துறையின் கடல் ஆராய்ச்சி பிரிவின் கூடுதல் இயக்குனர் அப்ரஜிதா சர்மா தலைமையில் 5 பேர் கொண்ட மத்திய தொல்லியல் துறை கடல் ஆராய்ச்சி குழுவினர் பாதுகாப்பு கவச உடை அணிந்து கடற்கரை கோயில் அருகில் படகில் சென்று நவீன கருவி மூலம் ஆய்வு செய்தனர். இதில் கடலில் மூழ்கிய 6 கோவில்களில் 1 கோயிலின் தடயங்கள் பாசியுடன் உள்ள கருங்கல் கட்டுமானங்கள் கிடைத்ததாக தெரிவித்தனர்.