News December 23, 2025
பல்லடம் மக்களே.. பயப்புடாதீங்க!

திருப்பூர், பல்லடம் பகுதிகளில் உள்ள காட்டுப்பகுதிகளில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக படத்துடன் சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவி வந்தன. இந்நிலையில் இது தொடர்பாக வனத்துறையினர் விளக்கம் அளித்துள்ளனர். அதில் பல்லடம் தாலுக்கா பகுதிகளில் வனவிலங்கு நடமாட்டம் உறுதி செய்யப்படவில்லை. உண்மைக்கு புறம்பான தகவல்களை பொதுமக்கள் நம்பி அச்சம் கொள்ள தேவை இல்லை என விளக்கம் அளித்துள்ளனர்.
Similar News
News December 27, 2025
திருப்பூர் வாக்காளர்களே சூப்பர் UPDATE!

திருப்பூர் மக்களே வரைவு வாக்காளர் பட்டியலில் உங்களது பெயர் உள்ளதா? என்பதை அறிய மிகவும் எளிய வழி ‘1950’ என்ற எண்ணிற்கு SMS அனுப்பி தெரிந்து கொள்ளலாம்! அதற்கு ‘ECI உங்கள் EPIC எண்’ (எ.கா.:- ECI SXT000001) என டைப் செய்து ‘1950’ என்ற எண்ணிற்கு அனுப்பினால், அடுத்த சில நொடிகளில் உங்களின் பெயர், வரிசை எண், பாகம், தொகுதி என அனைத்தும் குறுஞ்செய்தியாக வரும். இதனை அனைவருக்கும் அதிகமாக ஷேர் பண்ணுங்க!
News December 27, 2025
திருப்பூரில் தட்டி தூக்கிய போலீஸ்

திருப்பூர் மாவட்டம் அவிநாசி புதிய பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் தொடர் செல்போன் திருட்டுகள் நடைபெறுவதாக போலீசார் சோதனை பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கிடமான நபர்களை சோதனை செய்தபோது ஆந்திராவைச் சேர்ந்த நக்கா ஹரிஷ் உள்ளிட்ட 5 பேர் கொண்ட கும்பலை கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து 79 செல்போன் மற்றும் இரண்டு கார்களை பறிமுதல் செய்துள்ளனர்.
News December 27, 2025
திருப்பூரில் வசமாக சிக்கிய பெண்!

திருப்பூர் மத்திய குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் ராமன் என்பவர் பாளையக்காடு பகுதியைச் சேர்ந்த பெண் சீட் நடத்தி மோசடி செய்ததாக புகார் அளித்தார். புகார் பேரில் வழக்கு பதிவு செய்த மத்திய காவல் நிலைய போலீசார் பாளையக்காடு பகுதியில் சேர்ந்த 70 வயது பெண்ணை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் பல பேர் மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்ததை தொடர்ந்து அவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.


