News October 18, 2024

பல்லடம் பள்ளி மாணவர்கள் மாநில போட்டிக்கு தேர்வு

image

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி மாணவர்களுக்கான Under 18 பிரிவு கால்பந்துப் போட்டியில், பல்லடம் மங்கலம் சாலையில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்கள் முதலிடம் பெற்று, மாநில போட்டிகளுக்கு தேர்வு பெற்றுள்ளனர். இந்நிலையில் முதலிடம் பிடித்த மாணவர்களை பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பாராட்டி வருகின்றனர்.

Similar News

News July 9, 2025

கிராம உதவியாளர் பணிக்கு எப்படி விண்ணப்பிப்பது?

image

திருப்பூர் மாவட்டத்தில் காலியாக உள்ள 102 கிராம உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது. ▶️ இதற்கு எழுத்து, ஆவண சரிபார்ப்பு மூலம் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். ▶️ விண்ணப்பம் அந்தந்த மாவட்ட வலைதள பக்கத்தில் விண்ணப்பம் இருக்கும். அதை நகல் எடுத்து, பூர்த்தி செய்து மாவட்ட அலுவலகங்களில் சமர்ப்பிக்க வேண்டும். ▶️ விண்ணப்பிக்க ஆகஸ்ட்.5 கடைசி ஆகும். ▶️ தேர்வு-செப்.5-ம் தேதி நடைபெறும். (SHARE பண்ணுங்க)

News July 9, 2025

விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டம்

image

திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வரும் 18ம் தேதி காலை 10.30 மணிக்கு, அறை எண் 240 ல் நடைபெறுகிறது. இதில் அனைத்துதுறை அலுவலர்கள் மற்றும் விவசாயிகளும் கலந்துகொள்ளலாம்.
விவசாயிகளின் கோரிக்கைக்கான மனுக்களை வழங்கிடவும், பின்னர் பதிவு செய்யப்பட்ட விவசாய சங்கங்களில் ஒரு சங்கத்திற்கு ஒருவர் வீதம் பேசலாம் என மாவட்ட கலெக்டர் மனிஷ் கூறியுள்ளார்.

News July 8, 2025

காவல்துறையின் இரவு ரோந்து பணி விபரம்

image

திருப்பூர் மாவட்டத்தில் தங்களது பகுதியில் இன்று 08.07.2025 இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்களை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளவும். காங்கேயம், பல்லடம், உடுமலை, அவினாசி, தாராபுரம் ஆகிய பகுதியில் உள்ள காவல்துறையின் இரவு ரோந்து பணி விவரம் மாவட்ட காவல்துறையினரால் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் அவசர உதவிக்கு 108 ஐ அழைக்கவும்.

error: Content is protected !!