News December 4, 2024
பல்லடம் கொலை: புதிய கோணத்தில் விசாரணை

பல்லடம் அருகே செம்மலை கவுண்டன் பாளையம் ஒரே குடும்பத்தில் 3 பேர் கொலை வழக்கில், தற்போது போலிசார் 14 தனி படைகள் அமைத்து தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். சுற்றியுள்ள பகுதிகளில் சிசிடிவி கேமராக்கள் இல்லாததால் கண்டறிவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே, வாய்க்கால் வழியாக வந்து கொள்ளையடிக்கும் கும்பல் இதில் ஈடுபட்டிருக்கக்கூடும் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் புதிய கோணத்தில் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
Similar News
News December 5, 2025
பல்லடம் அருகே வசமாக சிக்கிய இருவர்: அதிரடி கைது!

பல்லடம் அடுத்த, கரையாம்புதுாரை சேர்ந்தவர் நாச்சம்மாள் 78. இவரின் வீட்டுக்கு ஹோட்டலில் வேலை பார்க்கும் பிரபு தென்னை மட்டை எடுப்பதற்காக அடிக்கடி வந்து செல்வது வழக்கம். பிரபு, அவரது நகைகளை பறிக்க திட்டமிட்டு, நண்பன் உசேன் முகமதுவை வரவழைத்தார். இருவரும் இணைந்து, 10 பவுன் தங்க நகைகளை பறித்துச் சென்றனர். இது குறித்து விசாரணை மேற்கொண்ட பல்லடம் போலீசார் இருவரையும் கைது செய்தனர்.
News December 5, 2025
திருப்பூரில் அருமையான வாய்ப்பு DON’T MISS

திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் செயல்படும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில், தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம், இன்று 5ம் தேதி, நடைபெறவுள்ளது. இதில் 8,10,12 , ஐடிஐ, டிப்ளமோ, டிகிரி முடித்தவர்கள் பங்கேற்று பயன்பெறலாம். மேலும் விவரங்களுக்கு, 94990 55944. இத்தகவலை SHARE பண்ணுங்க!
News December 4, 2025
திருப்பூர்: இரவு நேர ரோந்து போலீசார் விபரம்

திருப்பூர் மாவட்டத்தில் தங்களது பகுதியில் இன்று (04.12.2025) இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்களை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளவும். உடுமலைப்பேட்டை, தாராபுரம், பல்லடம், அவிநாசி, காங்கேயம் பகுதியில் உள்ள மக்கள் தங்கள் பகுதியில் குற்றம் நடைபெற்றால் உடனடியாக காவல்துறைக்கு தெரியப்படுத்தவும், அவசர உதவிக்கு 108 அழைக்கவும்.


