News September 11, 2024

பல்லடம் அருகே நேருக்கு நேர் மோதியதில் 2 பேர் பலி

image

திருப்பூர், பல்லடம் எடுத்த செஞ்சேரி புத்தூர் பகுதியில் இரண்டு பைக்குகள் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. இதனையடுத்து தொடர்ந்து அவ்வழியே சென்றவர்கள் அவர்களை மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இவ்விபத்தில் இருசக்கர வாகனத்தில் பயணித்த செல்வகுமார் மற்றும் முருகன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் ஒருவர் படுகாயம் அடைந்தார். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

Similar News

News November 20, 2024

திருப்பூர் தலைப்புச் செய்திகள்

image

1.உடுமலை மலை கிராமத்தில் தொடரும் சோகம்
2.திருப்பூரில் 3நாட்களுக்கு ஆதார் சிறப்பு முகாம்
3.போதைபொருள் விற்பனை -கலெக்டர் எச்சரிக்கை!
4.உடுமலை பஞ்சலிங்க அருவியில் குளிக்க அனுமதி
5.மின்சாரம் தாக்கி 3 மாடுகள் உயிரிழப்பு
6.திருப்பூர்: 265 ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம்
7.ஊத்துக்குளி பகுதியில் தொடர்ந்து ஆடுகள் பலி – விவசாயிகள் போராட்டம்

News November 20, 2024

திருப்பூரில் 3நாட்களுக்கு ஆதார் சிறப்பு முகாம்

image

திருப்பூர் அஞ்சல் தெற்கு உட்கோட்டம் மற்றும் திருப்பூர் லயன்ஸ் சங்கம் சார்பில் ஆதார் சிறப்பு முகாம் நாளை நவ 21ஆம் தேதி தொடங்கி 23 தேதி வரை 3 நாட்கள் நடக்கிறது, குமரன் சாலையில் உள்ள லயன்ஸ் சங்க கட்டிடத்தில் நடக்கும் முகாமில் முகவரி, பிறந்த தேதி, பெயர் மாற்றம் மற்றும் குழந்தைகளுக்கான இலவச ஆதார் கார்டு எடுப்பது போன்றவற்றை தேவையான ஆவணங்களை சமர்ப்பித்து புதுப்பித்துக் கொள்ளலாம் என தெரிவித்தனர்.

News November 20, 2024

போதைபொருள் விற்பனை -கலெக்டர் எச்சரிக்கை!

image

போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கை குறித்த மாதாந்திர ஆய்வு கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. இதில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கை குறித்து துறைவாரியாக ஆய்வு நடந்தது. மேலும் தடுப்பு நடவடிக்கை மற்றும் கண்காணிப்பை தொடர்ந்து மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். போதைப் பொருள் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் கிறிஸ்துராஜ் எச்சரிக்கை விடுத்தார்.