News December 21, 2025

பல்லடம் அருகே சோக சம்பவம்!

image

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே அவிநாசிபாளையத்தில் செயல்பட்டு வரும், தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தாளாளராக இருப்பவர் தனராஜசேகர். இவர் கல்லூரியில் உள்ள சிறு சிறு விவசாய வேலை செய்து கொண்டிருந்தபோது, புல் அரக்கும் எந்திரம் உடலில் சிக்கி உயிரிழந்தார். இது குறித்து அவிநாசி பாளையம் போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Similar News

News December 27, 2025

திருப்பூரில் வசமாக சிக்கிய பெண்!

image

திருப்பூர் மத்திய குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் ராமன் என்பவர் பாளையக்காடு பகுதியைச் சேர்ந்த பெண் சீட் நடத்தி மோசடி செய்ததாக புகார் அளித்தார். புகார் பேரில் வழக்கு பதிவு செய்த மத்திய காவல் நிலைய போலீசார் பாளையக்காடு பகுதியில் சேர்ந்த 70 வயது பெண்ணை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் பல பேர் மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்ததை தொடர்ந்து அவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

News December 27, 2025

இரவு ரோந்து பணி விபரம்

image

திருப்பூர் மாவட்டத்தில் தங்களது பகுதியில் இன்று இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்களை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளவும். காங்கேயம், தாராபுரம், உடுமலை, பல்லடம், அவினாசி ஆகிய பதிலுள்ள காவல் துறையின் இரவு ரோந்து பணி விபரம் மாவட்ட காவல் துறையினரால் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் அவசர உதவிக்கு 108ஐ அழைக்கவும்.

News December 26, 2025

திருப்பூரில் சம்பள உயர்வு தொடர்பான பேச்சுவார்த்தை

image

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பனியன் நிறுவனங்களில் பணிபுரியக்கூடிய தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வு தொடர்பான பேச்சுவார்த்தை திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க அலுவலகத்தில் பனியன் உற்பத்தியாளர்கள் சங்கம் மற்றும் தொழிற்சங்கத்தினருடன் இன்று நடைபெற்றது. இதில் உடன்பாடு ஏற்படாததால் மீண்டும் பேச்சுவார்த்தை ஜனவரி 19ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!