News February 20, 2025
பல்லடத்தில் ‘கள்’ விடுதலை மாநாடு அறிவிப்பு

நமது பாரம்பரிய வரலாற்று உணவு பானமான கள் அருந்துவதை, விற்பதை இந்திய அரசமைப்புச் சட்டம் பிரிவு 21 மற்றும் 47-இன் படி உணவு தேடும் உரிமையின் ஒரு பகுதியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. கள்ளை தமிழ்நாட்டின் மதுவிலக்கு சட்டத்தில் இருந்து நீக்கி, மரபுவழி உணவுப் பானமாக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தி தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் பல்லடத்தில் பிப்ரவரி 24-ஆம் தேதி கள் விடுதலை மாநாடு நடைபெறவுள்ளது.
Similar News
News August 24, 2025
காங்கேயத்தில் குடும்ப பிரச்சனையில் பெண் தற்கொலை

திருப்பூர் மாவட்டம், காங்கேயம் அடுத்த சிவன்மலை சரவணா நகரை சேர்ந்தவர் ஜெயலட்சுமி (28). இவர் கடந்த 7 வருடங்களுக்கு முன்னர் சுபாஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்துள்ளார். இந்நிலையில் இருவருக்கும் கடந்த சில மாதங்களாக கருத்து வேறுபாடு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று வீட்டில் யாரும் இல்லாத போது, ஜெயலட்சுமி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
News August 23, 2025
திருப்பூர் இரவு ரோந்து காவலர் விபரம்!

திருப்பூர் மாவட்டத்தில் தங்களது பகுதியில் இன்று 23.08.2025 இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்களை, பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளவும். காங்கேயம், தாராபுரம், உடுமலை, பல்லடம், அவிநாசி ஆகிய பகுதியிலுள்ள காவல் துறையின் இரவு ரோந்து பணி விபரம் மாவட்ட காவல்துறையினரால் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் அவசர உதவிக்கு 108 ஐ அழைக்கவும்.
News August 23, 2025
திருப்பூர்: குறைந்த விலையில் பைக் வாங்க ஆசையா?

திருப்பூர் மாவட்ட மதுவிலக்கு காவல்துறையால் பறிமுதல் செய்யப்பட்ட, 11 நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் 24 இருசக்கர வாகனங்கள் என 35 வாகனங்கள் வரும் 26 ஆம் தேதி ஏலம் இடப்படுகிறது. அவிநாசி மடத்துபாளையம் பகுதியில் உள்ள தனியார் நிலத்தில் நடைபெறும் ஏல நிகழ்ச்சிகள், ரூ.5000 முன்வைப்புத் தொகையாக செலுத்தி, ஏலத்தில் பொதுமக்கள் கலந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!