News May 4, 2024
பல்நோக்கு சேவை இயக்கத்தின் பொதுக்குழு கூட்டம்

நீடாமங்கலம் பல்நோக்கு சேவை இயக்கத்தின் பொதுக்குழு கூட்டம் நேற்று நீடாமங்கலத்தில் பத்மஸ்ரீ ராமன் தலைமையிலும் துணைத் தலைவர் ராஜேந்திரன் பொருளாளர் ரவிச்சந்திரன் முன்னிலையிலும் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் புவி வெப்பமயமாதலை தடுக்கும் நோக்கத்தில் நீடாமங்கலம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் அதிக அளவில் மரங்களை நட்டு வளர்க்க தீர்மானிக்கப்பட்டது.
Similar News
News August 26, 2025
திருவாரூர்: ஜனாதிபதி தலைமையில் பட்டமளிப்பு விழா!

திருவாரூர் மாவட்டம் நீலக்குடியில் உள்ள தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தின் 10-வது பட்டமளிப்பு விழா வருகிற செப்.3-ம் தேதி நடக்கிறது. இந்த விழாவில் ஜனாதிபதி திரௌபதி முர்மு கலந்து கொண்டு தங்க பதக்கங்களை மாணவர்களுக்கு வழங்குகிறார். இந்த ஆண்டு 568 மாணவிகள், 442 மாணவர்கள் என 1,010 பேர் பட்டம் பெறுகின்றனர். இதில் 45 மாணவ-மாணவிகளுக்கு தங்க பதக்கங்கள் வழங்கப்பட உள்ளன என துணைவேந்தர் கிருஷ்ணன் கூறியுள்ளார்.
News August 26, 2025
திருவாரூர்: இரவு நேர ரோந்து காவலர்களின் விவரம்

திருவாரூர் மாவட்டத்தில் இன்று (25.08.2025) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவல் அதிகாரிகள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய எண்களை மாவட்ட காவல் நிர்வாகம் வெளியிட்டுள்ளது. இரவு நேர குற்றங்களை தடுக்க காவல் துறையின் உடனடி உதவிக்கு, இரவு ரோந்து காவல் அதிகாரிகளை அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News August 25, 2025
திருவாரூர்: திருமணத் தடை நீக்கும் கோயில்!

திருவாரூர் அடுத்த திருநெல்லிக்காவில் அமைந்துள்ள நெல்லிவனநாதர் கோயில் ஒரு சிறப்பு வாய்ந்த திருத்தலமாகும். இங்கு மூலவராக அருள்பாலிக்கும் நெல்லிவனநாதர், திருமணத் தடைகளை நீக்கி, மாங்கல்ய வரம் அருளும் அற்புத தெய்வமாக போற்றப்படுகிறார். இவருக்கு வஸ்திரம் சாத்தி அபிஷேகம் செய்து வழிபட்டால் திருமண தடை நீங்குமென நம்பப்படுகிறது. நீண்ட நாட்களாக திருமணம் ஆகாதவர்களுக்கு இத்தகவலை SAHRE பண்ணுங்க..