News December 30, 2025
பல்கலை., மசோதாவை திருப்பி அனுப்பினார் ஜனாதிபதி

சென்னை பல்கலை., துணை வேந்தரை நீக்கவும், நியமிக்கவும் அரசுக்கு அதிகாரம் அளிக்கும் சட்டத்திருத்த மசோதா 2022-ல் நிறைவேற்றப்பட்டது. கவர்னர் ரவி அதனைத் திருப்பி அனுப்பிய நிலையில், மீண்டும் மசோதா நிறைவேற்றப்பட்டு அவருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. 2023-ல் கவர்னர் அதை ஜனாதிபதியின் பரிசீலனைக்கு அனுப்பி வைத்தார். மசோதாவை 2 ஆண்டுகளாக நிலுவையில் வைத்திருந்த முர்மு, தற்போது TN அரசுக்கு திருப்பி அனுப்பியுள்ளார்.
Similar News
News December 31, 2025
Google Earth-ல் டைம் டிராவல் பண்ணலாம் தெரியுமா?

நீங்கள் இருக்கும் ஏரியா 40 ஆண்டுகளுக்கு முன் எப்படி இருந்தது என்பதை தெரிஞ்சுக்கணுமா? ➤Google Earth-க்குள் செல்லுங்கள் ➤இதில் ‘Explore Earth’ என்ற ஆப்ஷன் இருக்கும் ➤அதை க்ளிக் செய்தால், மேலே ‘View’ என்ற ஆப்ஷன் காட்டும் ➤அதில் ‘Show Historical Imagery’ ஆப்ஷனை க்ளிக் பண்ணுங்க. இப்படி செய்தால் பல ஆண்டுகளுக்கு முன் நீங்கள் வசிக்குமிடம் எப்படி இருந்தது என Time Travel செய்து பார்க்கமுடியும். SHARE.
News December 31, 2025
விஜய் + காங்கிரஸ்.. கூட்டணி முடிவாகிறது

காங்கிரஸுக்கு 25 சீட்டுக்கு மேல் கொடுக்கக்கூடாது என்ற முடிவில் திமுக இருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கெனவே கேட்பதை கொடுக்காவிட்டால் திமுக கூட்டணியில் காங்., நீடிக்குமா என்பது சந்தேகம்தான் என பேசப்பட்டது. இதனால் தவெக உடன் காங்., மறைமுகமாக பேச்சுவார்த்தை நடத்துவதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் இப்படியொரு தகவல் வெளியாகியுள்ளதால், தவெக-காங்., கூட்டணி முடிவாக வாய்ப்புள்ளதாக விமர்சகர்கள் கூறுகின்றனர்.
News December 31, 2025
ரயில் பயணிகளுக்கு ஜாக்பாட்!

RailOne செயலியில் முன்பதிவில்லா டிக்கெட் பெறுவோருக்கு 3% தள்ளுபடி அறிவித்துள்ளது இந்திய ரயில்வே. செயலி மூலம் டிக்கெட் பெறுவதை ஊக்குவிக்கும் வகையில் ஜன.14 முதல் ஜூலை 14 வரை இச்சலுகை அமல்படுத்தப்பட உள்ளது. தற்போது RailOne செயலியில் R-wallet மூலம் டிக்கெட் பெற்றால் மட்டுமே 3% கேஷ்பேக் வழங்கப்படும் நிலையில், UPI, டெபிட் கார்டு உள்ளிட்ட அனைத்து டிஜிட்டல் கட்டண முறைகளுக்கும் இனி தள்ளுபடி கிடைக்கும்.


