News January 15, 2025

பல்கலையில் மர்ம நபர்கள் அத்துமீறல் 

image

அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் அமைப்பின் தேசிய பொறுப்பாளர் கிருத்திகா நேற்று லாஸ்பேட்டையில் செய்தியாளர்களிடம் கூறும் பொழுது புதுச்சேரி தொழில் நுட்ப பல்கலையில் அத்துமீறி நுழைந்த 4 நபர்கள் அங்கு நண்பருடன் பேசிக் கொண்டிருந்த முதலாமாண்டு மாணவியிடம் தகராறு செய்துள்ளனர். பின்னர் பாலியல் தொல்லை தர முயன்றுள்ளனர். இதுகுறித்து பெண் ஐ.பி.எஸ் தலைமையில் குழு அமைத்து விசாரணை நடத்த கோரிக்கை வைத்தார்.

Similar News

News September 11, 2025

புதுச்சேரி: அரசு சார்பில் குடியிருப்பு வசதி ஆணை

image

புதுச்சேரி அரசு குடிசை மாற்று வாரியத்தின் மூலம் காமராஜர் நகர் தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த 13 குடும்பங்களுக்கு குடியிருப்பு வசதி ஒதுக்கீடு செய்து அதற்கான ஆணையினை புதுச்சேரி மாநில வீட்டுவசதி அமைச்சர் திருமுருகன் மற்றும் அமைச்சர் ஜான்குமார் ஆகியோரின் முன்னிலையில் புதுச்சேரி மாநில முதலமைச்சர் ரங்கசாமி அவர்களால் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது.

News September 10, 2025

புதுச்சேரி: வங்கி பணம் காணாமல் போகிறதா?

image

உங்கள் Bank Account-யில் திடீரென்று பணம் காணாமல் போகிறதா? போலி வங்கி லிங்க், யூபிஐ, ரிவார்டு மெசேஜ்கள், போலி வேலை வாய்ப்பு, ஷாப்பிங் செய்ய ஆசைப்பட்டு பணத்தை இழந்தால் மோசடியின் ஸ்கிரீன்ஷாட், SMS, E-mail போன்ற ஆதாரங்களை வைத்து, <>இங்கே கிளிக் <<>>செய்து புகார் அளித்து உங்கள் பணத்தை மீட்க முடியும். அல்லது 1930 என்ற எண்ணில் சைபர் கிரைம் போலீசாருக்கு அழைத்து புகார் அளிக்கலாம். இத்தகவலை SHARE பண்ணுங்க..

News September 10, 2025

புதுவையில் குடிநீரை வைத்து அரசியல் நாடகம் !

image

புதுச்சேரி அதிமுக செயலாளர் அன்பழகன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில். புதுவையில் சுகாதாரமற்ற குடிநீரால் சிலர் மரணம் அடைந்துள்ளதாக செய்திகள் வருகின்றன.இது மிகவும் வருத்தமளிக்க கூடியது. இதை மையப்படுத்தி திமுக உள்ளிட்ட கட்சிகள் போராட்டம் என்ற பெயரில் அரசியல் நாடகத்தை அரங்கேற்றி வருவது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இதில் ஆளுநர் , முதல்வர் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!