News January 10, 2025

பலூன் திருவிழா தொடங்கியது

image

சென்னை கிழக்கு கடற்கரை சாலை கோவளம் அருகே உள்ள திருவிடந்தையில் சர்வதேச பலூன் திருவிழா இன்று (ஜன.10) தொடங்கியது. 12ஆம் தேதி வரை நடைபெறும் இந்தத் திருவிழாவில், பிரான்ஸ், பிரேசில், பெல்ஜியம், இங்கிலாந்து, ஜப்பான், தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளில் இருந்து குழந்தைகளை கவரும் வகையில் சிறுத்தை, ஓநாய், யானைகள், உருவம் கொண்ட பலூன்களும் வெப்ப காற்று பலூன்களும் பறக்க விடப்படுகின்றன.

Similar News

News January 26, 2026

செங்கல்பட்டில் கோர விபத்து; பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து

image

கேரளாவில் இருந்து வந்த பேருந்து கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் பயணிகளை இறக்கிவிட்டு கோயம்பேடுக்கு செல்ல வேண்டிய சுமார் 18 பயணிகளுடன் தாம்பரம்-மதுரவாயல் பைபாஸ் சாலை வழியாக சென்று கொண்டிருந்தது. பல்லாவரம் அடுத்த திருநீர்மலை அருகே வரும்போது திடீரென பஸ்சின் முன்புற வலது பக்க டயர் வெடித்தது. இதனால் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ், சுமார் 10 அடி ஆழ பள்ளத்தில் கவிழ்ந்தது. இதனால் 20 பேர் காயமடைந்தனர்.

News January 26, 2026

அறிவித்தார் செங்கல்பட்டு கலெக்டர்!

image

செங்கல்பட்டு மாவட்டத்தில் கேஸ் நுகர்வோர்களுக்கான குறைதீர்க்குக் கூட்டம் வருகிற ஜன.29ஆம் தேதி மாலை 4:00 மணி அளவில், கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது. இதில், கேஸ் சம்மந்தமான பிரச்னைகள், குறைகள் உள்ளிட்டவைகளுக்கான மனுக்கள் பெறப்பட்டு, தீர்வு காணப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பொதுமக்கள் தவறாமல் கலந்துகொள்ளுமாறு மாவட்ட கலெக்டர் சினேகா கேட்டுக்கொண்டுள்ளார்.(SHARE IT)

News January 26, 2026

செங்கல்பட்டு இன்று இரவு பணி செய்யும் காவலர் விவரம்

image

செங்கல்பட்டு நேற்று (ஜனவரி-25) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!