News November 14, 2024

பலியர் இன மக்களுக்கு 11 வீடுகள்

image

திண்டுக்கல் மாவட்டம் ஆடலூர் ஊராட்சி, குளவி கரை பகுதியில் பலியர் இன மக்கள் வசிப்பதற்காக 11 வீடுகள் கட்டப்பட்டது. இந்த வீடுகளையும், ரெட்டியார்சத்திரம் வாஸ் இன்ஸ்டிடியூட் சார்பாக 7 லட்சம் மதிப்பில் சிறு மின்விசை தண்ணீர் தொட்டியையும் ரெட்டியார்சத்திரம் ஒன்றிய குழு தலைவர் சிவகுருசாமி திறந்து வைத்தார். உடன் ரெட்டியார்சத்திரம் வார்டு உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Similar News

News November 19, 2024

குடகானாறு அணை நீர் இன்று திறப்பு

image

வேடசந்தூரில் 27 அடி கொண்ட அழகாபுரி குடகனாறு அணை நேற்று இரவு 7 மணிக்கு 26 அடியாக உயர்ந்தது. வினாடிக்கு 200 கன அடி தண்ணீர் வருவதால் இன்று காலை 10 மணிக்கு வேடசந்தூர் எம்.எல்.ஏ., காந்திராஜன் திறப்பதாக உதவி பொறியாளர் மகேஸ்வரன் தெரிவித்துள்ளார். கரையோர மக்கள் எச்சரிக்கையுடன் இருக்கும்படி கேட்டுள்ளார்.

News November 19, 2024

திண்டுக்கல் பேராசிரியர் மீது நடவடிக்கை

image

திண்டுக்கல், சின்னாளப்பட்டி அருகே உள்ள காந்திகிராம கிராமிய பல்கலைக்கழக சுகாதாரத் துறையில் பணிபுரியும் பேராசிரியர் ரங்கநாதன், வகுப்பறையில் அரசியல்வாதி போல் நடந்து கொள்வதாலும், பாஜக நிர்வாகி போல் செயல்படுவதாக மாணவர்கள் அவர் மீது குற்றம் சாட்டினர். இதன் அடிப்படையில் அவரை விருப்ப ஓய்வு எடுக்க வேண்டுமென கல்லூரியின் துணை வேந்தர் உத்தரவிட்டுள்ளார். இச்சம்பவம் கல்லூரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

News November 19, 2024

வீட்டின் பூட்டை உடைத்து 6 1/2 பவுன் தங்க நகை, பணம் கொள்ளை

image

தாமரைப்பாடி நவீன் நகரை சேர்ந்த ஹபிப்ரஹ்மான்(60) சித்த மருத்துவர். இவர் குடும்பத்துடன் வேல்வார்கோட்டையில் உள்ள தனது மகள் வீட்டிற்கு  சென்றுள்ளார். இந்நிலையில் திரும்பி வந்து பார்த்தபோது மர்ம நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்து பீரோவை உடைத்து 6 1/2 பவுன் தங்க நகை, ரூ.2 ஆயிரம் பணம் ஆகியவற்றை கொள்ளையடித்தது தெரிய வந்தது. அதன் புகாரில்  வடமதுரை போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.