News January 1, 2026
பலவீனமாக இருந்தாலும் அதிமுக தான் போட்டி: உதயநிதி

தமிழகத்தின் தற்போதைய அரசியல் சூழலில், திமுகவுக்கு எதிரான பலம் வாய்ந்த போட்டியாளர் யாரும் இல்லை என DCM உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நாளிதழுக்கு அவர் அளித்த பேட்டியில், நீண்ட காலமாக பிரதான போட்டியாளராக இருந்த அதிமுக பலவீனமாக இருந்தாலும், தற்போது வரை அதிமுகவையே பிரதான எதிர்க்கட்சியாக பார்ப்பதாக குறிப்பிட்டுள்ளார். பாஜக மற்றும் அதன் பி டீம்களை எதிர்கொள்ள தயாராக இருப்பதாகவும் அவர் கூறினார்.
Similar News
News January 2, 2026
திருவள்ளூர் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு!

திருவள்ளூர்: வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ள நிலையில், பொதுமக்கள் தங்களின் பெயர் பட்டியலில் இடம்பெற்றுள்ளதா என்பதை ஆன்லைனில் சரிபார்க்கலாம். பெயர் இடம்பெறாதவர்கள் அல்லது தவறுகள் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்து திருத்தம் செய்து கொள்ளலாம். மேலும், எதிர்வரும் தேர்தலில் வாக்களிக்கும் உரிமையை உறுதி செய்ய உதவும் என ஆவடி மாநகராட்சி அறிவித்துள்ளது.
News January 2, 2026
ரகசியங்களை பகிர்ந்த இந்தியா – பாகிஸ்தான்

இந்தியா மற்றும் பாகிஸ்தான், ஒவ்வொரு ஆண்டும் ஜன.1-ம் தேதி தங்களிடம் உள்ள அணுசக்தி நிலையங்கள் குறித்த தகவல்களை பரிமாறிக்கொள்ள வேண்டும் என 1988-ல் ஒப்பந்தம் கையெழுத்தானது. மோதல் ஏற்படும்போது அணுசக்தி நிலையங்கள் மீது தாக்குதல் நடத்துவதை தவிர்க்கும் விதமாக இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்நிலையில், ஒப்பந்தத்தின் படி நேற்று இருநாடுகளும், அணுசக்தி நிலையங்கள் குறித்த தகவல்களை பகிர்ந்து கொண்டன.
News January 2, 2026
அதிமுக விருப்ப மனு மூலம் ₹15.26 கோடி

2026 தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட 10,175 விருப்ப மனுக்கள் பெறப்பட்டுள்ளன. விருப்ப மனு ஒன்றிற்கு ₹15,000 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இதன்படி பார்த்தால், விருப்ப மனுக்கள் மூலம் அதிமுகவுக்கு ₹15.26 கோடி (15 கோடியே 26 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய்) கிடைத்துள்ளது. குறிப்பாக, EPS போட்டியிட வேண்டும் என 2,187 மனுக்கள் பெறப்பட்டதன் மூலம் 3 கோடியே 28 லட்சத்து 5 ஆயிரம் கிடைத்துள்ளது.


