News July 24, 2024

பலரும் விரும்பும் நீலகிரி ‘ஹோம் மேட் சாக்லேட்’

image

நீலகிரியில் தயாரிக்கப்படும் ‘ஹோம் மேட் சாக்லேட்டுகளை’ சுற்றுலாப் பயணிகள் பெரிதும் விரும்புகின்றனர். இங்கிருந்து மும்பை, பெங்களூரு, சென்னை, கோவை உட்பட பல்வேறு நகரங்களுக்கும் சாக்லேட்டுகள் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதில் நட், ராக்ஸ், புரூட் அண்டு நட், ஒயிட் சாக்லேட்டுகள் மிகவும் பிரபலம். சர்க்கரை நோயாளிகளுக்காக சுகர் ஃபிரீ சாக்லேட்டுகளும் உள்ளன. இவை சுமார் ரூ.300 முதல் ரூ.3,500 வரை விற்பனையாகிறது.

Similar News

News March 6, 2026

குன்னூர்பள்ளியில் ஒன்பதாவது வகுப்பு படிக்கும் மாணவர் மரணம்

image

அருவங்காடு பகுதியைச் சார்ந்த, குன்னூர் தனியார் பள்ளியில் ஒன்பதாவது வகுப்பு படிக்கும் மாணவர் புகழ் இன்று மாலை பள்ளி முடிந்து வரும் வழியில் மரணம் அடைந்துள்ளார் தற்போது அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக குன்னூர் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் காவல்துறையினர் இது குறித்த விசாரணை நடத்தி வருகின்றனர்.

News March 6, 2026

அறிவித்தார் நீலகிரி கலெக்டர்!

image

நீலகிரியில் 6 தாலுகாவுக்கு உட்பட்ட பகுதிகளில் கட்டட அனுமதி தொடர்பாக இணையதளத்தில் விண்ணப்பிக்கும்போது சந்தேகம் ஏற்பட்டால், 9442772701 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு சந்தேகங்களை தீர்த்துக் கொள்ளலாம். மேலும் சுற்றுவட்டார பகுதியில் விதிகளை மீறி கட்டப்படும் கட்டங்கள் தொடர்பாக 9442772709 என்ற மொபைல் எண்ணில் புகார் தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News March 6, 2026

நீலகிரி: இரவு ரோந்து போலீசார் விவரம்!

image

நீலகிரி மாவட்டத்தில் நேற்று (05.03.2026) இரவு முதல் இன்று காலை வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் அவர்களின் தொடர்பு எண்கள் வெளியிடப்பட்டுள்ளன. உதகை நகரம், ஊரக உட்கோட்டம், குன்னூர், கூடலூர் மற்றும் தேவாலா உட்கோட்டம் ஆகிய காவல் நிலைய அதிகாரிகளை தொடர்பு கொள்ள வேண்டிய எண்களை நீலகிரி மாவட்ட காவல்துறை பொதுமக்களின் பாதுகாப்பு கருதி அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.

error: Content is protected !!