News March 21, 2026

‘பறவைக்காய்ச்சல்’ பயம் தேவையில்லை: தமிழக அரசு

image

கிண்டியில் அடுத்தடுத்து பறவைகள் உயிரிழந்த நிலையில், பறவைக்காய்ச்சல் தடுப்பு வழிகாட்டுதல்களை முறையாக பின்பற்ற TN அரசு அறிவுறுத்தியுள்ளது. இறைச்சிக் கடை ஊழியர்கள் கவனமாக பணியாற்றவும், கழிவுகளை பொதுவெளியில் கொட்டக்கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. TN-ல் மனிதர்களுக்கு இதுவரை பறவைக்காய்ச்சல் பாதிப்பில்லை என்பதால் மக்கள் பயப்பட வேண்டாம்; தகவல்களுக்கு 104 எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.

Similar News

News April 8, 2026

விஜய்யின் திட்டத்தில் திடீர் மாற்றம்

image

சட்டப்பேரவை தேர்தலுக்காக கடலூரில் விஜய் நாளை பிரசாரம் மேற்கொள்ளவிருந்தார். இந்நிலையில், விஜய்யின் கடலூர் பரப்புரை ஒத்திவைக்கப்படுவதாக தவெக அறிவித்துள்ளது. புதுச்சேரியில் நாளை சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுவதால் அவரது பரப்புரை ஒத்திவைக்கப்படுவதாகவும், புதிய தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. <<-se>>#TNElection2026<<>>

News April 8, 2026

விடுமுறை.. 5 நாள்களுக்கு சிறப்பு பஸ்கள் அறிவிப்பு

image

வார இறுதி நாள்கள், தமிழ் புத்தாண்டையொட்டி 5 நாள்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. மக்கள் நெரிசலின்றி ஊர்களுக்குச் செல்லும் வகையில், சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இருந்து நாளை மறுநாள் (ஏப்.10) முதல் கூடுதல் பஸ்கள் இயக்கப்பட உள்ளன. நீங்களும் ஊருக்குச் செல்லும் பிளான் வைத்திருந்தால், TNSTC இணையதளம் (அ) செயலியில் இப்போதே டிக்கெட் முன்பதிவு செய்யுங்கள். SHARE IT

News April 8, 2026

கிரீஸில் குழந்தைகள் சமுக ஊடகம் பயன்படுத்த தடை

image

கிரீஸ் நாட்டில் 2027 ஜனவரி 1 முதல் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகள், சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட உள்ளது. போனுக்கு அடிமையாவது, இணையவழி மிரட்டல்களில் சிக்குவது மற்றும் பதற்றம் போன்ற மனநலப் பிரச்னைகள் ஆகியவற்றில் இருந்து குழந்தைகளை பாதுகாக்க இத்தகைய முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு பிரதமர் தெரிவித்துள்ளார். ஏற்கெனவே பல நாடுகள் இந்த முடிவை எடுத்துள்ளன. இந்தியாவிலும் இந்த தடை வருமா?

error: Content is protected !!