News July 25, 2024
பறவைகள் சரணாலய இடத்தை கலெக்டர் ஆய்வு

வேதாரண்யம் தாலுக்கா பஞ்சநதிக்குளம், நடுச்சேத்தி ஊராட்சி சிறுதலை காடு பகுதியில் புதிதாக சரணாலயம் அமைப்பதற்கு தேவையான இடத்தை மாவட்ட ஆட்சித் தலைவர் பிரகாஷ் ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது வட்டாட்சியர் திலகா, கோட்டாட்சியர் பெருமால் , ஊராட்சி மன்ற தலைவர் சத்யகலா செந்தில்குமார் மற்றும் உள்ளாட்சிப் பிரதிநிதிகள், துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்
Similar News
News March 6, 2026
நாகை மக்களே… இன்று இதை மறக்காதீங்க!

நாகை மக்களே இன்று காலை 8.24 மணிக்கு கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு சனி பகவான் பெயர்ச்சி அடைந்துள்ளார். எனவே இன்று மாலை 5.30 மணிக்குள் அருகிலுள்ள கோயிலிக்கு சென்று சனி பகவானுக்கு நல்லெண்ணெய் தீபமேற்றி வழிபட்டு சாப்பாடு, தண்ணீர், பழச்சாறு, செருப்பு, குடை ஆகியவற்றை தானமாக வழங்கினால் வாழ்வில் சுபிட்சம் உண்டாகும் என நம்பிக்கை! மறக்காமல் இதனை அனைவருக்கும் SHARE பண்ணுங்க
News March 6, 2026
நாகை: இனி வாட்ஸ்ஆப் மூலம் சான்றிதழ்கள்!

நாகை மக்களே பிறப்பு/இறப்பு சான்றிதழ், வருமான சான்று, பட்டா, சொத்துவரி, வேளான் திட்டங்கள், மாணவர்களுக்கு உதவித்தொகை மற்றும் மின்சாரக் கட்டணம் செலுத்துதல் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட அரசு சேவைகளை இனி வாட்ஸ்அப் மூலமாகவே எளிதாகப் பெறலாம். இதற்கு உங்களது வாட்ஸ்ஆப்பில் இருந்து ‘78452 52525’ என்ற எண்ணிற்கு ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும். இத்தகவலை தெரிந்துகொள்ள அனைவருக்கும் SHARE பண்ணுங்க.
News March 6, 2026
நாகை: இளைஞரிடம் ரூ.6.34 லட்சம் மோசடி

நாகை மாவட்டம், வேளாங்கண்ணியைச் சேர்ந்தவர் முகேஷ்(31). இவர் மியூச்சுவல் பண்ட் முதலீட்டில் அதிக லாபம் கிடைக்கும் என நம்பி, அடையாளம் தெரியாத நபர்கள் இணைத்த வாட்ஸ்அப் குரூப் மூலம் ரூ.6.34 லட்சம் அனுப்பியுள்ளார். பணம் அனுப்பிய பிறகு தொடர்பு துண்டிக்கப்பட்டதால் மோசடி வெளிச்சத்திற்கு வந்த நிலையில், முகேஷின் புகாரின் பேரில் சைபர் க்ரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


