News January 21, 2025
பறவைகள் கணக்கெடுக்கும் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

தாமிரபரணியில் பறவைகள் கணக்கெடுப்பின் 15 ஆவது நிகழ்ச்சி மணிமுத்தாறில் இயங்கி வரும் அகத்திய மலை மக்கள் சார் இயற்கை வள காப்பு மையத்தில் வருகின்ற 24,25,26 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் https://forms.gle/J3mVGSbENUMwPqVF6 என்ற இணையதளத்தில் மூலம் நாளை மாலை 5 மணிக்குள் பதிவு செய்து கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.
Similar News
News November 16, 2025
பள்ளி மாணவர்களுக்கு போட்டிகள் அறிவிப்பு

நெல்லை அரசு அருங்காட்சியகமும் தீந்தமிழ் கலை இலக்கிய அறக்கட்டளையும் இணைந்து குழந்தைகள் தினத்தை முன்னிட்டு வருகின்ற நவம்பர் 23ஆம் தேதி அரசு அருங்காட்சியகத்தில் வைத்து பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடைபெற உள்ளன. இதில் கலந்துகொள்ள விருப்பம் உள்ள மாணவர்கள் 7548810067 என்ற எண்ணை தொடர்பு கொண்டு வருகின்ற 21ஆம் தேதிக்குள் தெரிவிக்க வேண்டுமென இன்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
News November 16, 2025
39969 பேரின் எஸ்ஐஆர் விவரம் பதிவேற்றம் – கலெக்டர் தகவல்

நெல்லையில் 1490 வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வீடு
வீடாகச் சென்று எஸ்ஐஆர் கணக்கீட்டு படிவங்களை வழங்குகின்றனர். மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 14,18,325ல் 13,36,667 பேருக்கு (94.2%) படிவங்கள் வழங்கப்பட்டுள்ளன. மொபைல் மூலம் நிரப்பிய படிவங்களை பெற்று ஆப்பில் பதிவேற்றம் செய்கிறார்கள். இதுவரை 39,969 பேரின் படிவங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன என கலெக்டர் சுகுமார் இன்று அறிவித்துள்ளார்.
News November 15, 2025
நெல்லை: பட்டா வைத்திருப்போருக்கு நற்செய்தி!

நெல்லை மக்களே, நிலங்களின் பட்டா விவரங்களை அறிய உங்கள் போனில் லொக்கேஷனை ஆன் செய்துவிட்டு AAVOT.COM என்ற இணையதளம் செல்லுங்கள். அதில் இருக்கும், SEARCH BOX-ல் NILAM என SEARCH செய்தால் கீழே Check Land என இருக்கும். அதை க்ளிக் செய்து, நீங்கள் இருக்கும் இடத்தின் விவரங்களை அறியலாம்.(அ) TamilNilam என்ற செல்போன் செயலி மூலமாகவும் அறியலாம். பட்டா விவரம் மட்டுமின்றி பிற விவரங்களையும் அறிய முடியும். SHARE IT.


