News July 10, 2025

பறவைகளுக்காக பண்டிகையை துறந்த மக்கள்

image

செங்கல்பட்டு, வேடந்தாங்கல் இது ஒரு சரணாலயம் மட்டுமல்ல. இது இயற்கையின் சுழற்சியையும், மனிதர்களின் பாதுகாப்பையும் உணர்த்தும் ஒரு தனித்துவமான இடம். இது பறவைகளுக்கான புகலிடமாக மாறியுள்ளது. ஆண்டுதோறும் அக்டோபர் முதல் மார்ச் வரை உலகம் முழுவதிலும் இருந்து பல்லாயிரக்கணக்கான பறவைகள் இங்கு வந்து இனப்பெருக்கம் செய்கின்றன. பறவைகள் இங்கு வந்து செல்வதால் இந்த ஊர் மக்கள் தீவாளிக்கு கூட வெடி வெடிப்பதில்லை. ஷேர்!

Similar News

News July 10, 2025

பேருந்தில் மீதி சில்லறையை வாங்க வில்லையா? கவலை வேண்டாம்

image

பேருந்து பயணத்தில் ‘அப்றம் சில்லறையை வாங்கிக்கோங்கனு’ கன்டக்டர் சொன்ன நொடியில் இருந்து, மீதி சில்லறை கிடைக்குமோ கிடைக்காதோ என்ற பதற்றம் தொற்றிக்கொள்ளும். இனி அந்த கவலை வேண்டாம். ஒரு வேளை உங்களது மீது சில்லறையை வாங்காமல் இறங்கிவிட்டால் 18005991500-க்கு கால் பண்ணி உங்கள் டிக்கெட் விவரத்தை சொன்னால் போதும், உங்க காசை GPAY செய்து விடுவார்கள். மேலும் தகவலுக்கு (9445030523). எல்லாருக்கும் ஷேர் பண்ணுங்க!

News July 10, 2025

புதிய தோற்றம் பெரும் செங்கல்பட்டு ரயில் நிலையம்

image

செங்கல்பட்டு ரயில் நிலையம் அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் ரூ. 22.14 கோடி மதிப்பீட்டில் மறுசீரமைக்கப்பட்டு வருகிறது. பணிகள் முடிந்ததும், இந்த நிலையம் நாள் ஒன்றுக்கு ஒரு லட்சம் பயணிகளைக் கையாளும் திறன் கொண்டதாக மாறும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ரயில்வே நிர்வாகம் தீபாவளிக்குள் பணிகளை முடிக்க இலக்கு நிர்ணயித்துள்ளது. இது செங்கல்பட்டு பயணிகளுக்கு பெரும் வசதியை ஏற்படுத்தும்.

News July 10, 2025

செங்கல்பட்டில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் வீடு 2/2

image

கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் சேர சொந்தமாக 350 ச.அடி நிலமும், பட்டாவும் இருக்க வேண்டும். சொந்தமாக கான்கிரீட் வீடு இருக்க கூடாது. குடிசை வீடு எனில் ஒரு பகுதி ஓடு/ கான்கீரிட்டாக இருக்க கூடாது. கிராமப்புறத்தில் வசிப்பவராக இருக்க வேண்டும். அந்த நிலத்தை வணிக நோக்கில் பயன்படுத்தி வந்தால், விண்ணப்பிக்க இயலாது. சொந்த வீடு கனவை நனவாக்கும் சூப்பர் திட்டம் சீக்கிரம் அப்ளை பண்ணுங்க. அப்டியே ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!